Published : 15 Jan 2023 06:18 AM
Last Updated : 15 Jan 2023 06:18 AM
சென்னை: தமிழகத்தில் பறையொலிகள் நின்றுபோய், கலை விழாக்கள் கலையிழந்து போயிருந்தன. அவற்றுக்கெல்லாம் புத்தாக்கம் அளிக்கும் வகையில் சிறப்பான ஆட்சி மலர்ந்துள்ளது என்று இலக்கியச் சங்கமம் தொடக்க விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழ் வளர்ச்சித் துறை, கலை பண்பாட்டுத் துறைஆகியவற்றின் சார்பில், இலக்கியசங்கமம் நிகழ்ச்சி அடையாறு, முத்தமிழ்ப்பேரவை அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையுரையாற்றி பேசிய தாவது:
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் பறையொலிகள் நின்றுபோய், கலை விழாக்கள் கலையிழந்து போயிருந்தன. அவற்றுக்கெல்லாம் புத்தாக்கம் அளிக்கும் வகையில் சிறப்பான ஆட்சி மலர்ந்துள்ளது. சென்னையில் 2007-ல் இருந்து மூலைமுடுக்கெல்லாம் நாட்டுப்புறக் கலைஞர்கள் நிறைந்திருந்தனர். சாமானியஎளிய மக்களின் கலை வடி வங்களை எடுத்துச் சொல்வதாக சென்னை சங்கமம் வந்தது.
10 ஆண்டுகளுக்குப் பின்: நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நலவாரியத்தை உருவாக்கித் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. சென்னை சங்கமத்தை கனிமொழி அப்போது ஒருங்கிணைத்து நடத்தினார். தற்போது 10 ஆண்டுகளுக்குப்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், தமிழ் வளர்ச்சி, கலை பண்பாட்டுத் துறையின் நிகழ்ச்சிகள் என்பது நம் பண்பாட்டை நிறுவக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று நட வடிக்கை எடுத்து வருகிறார்.
ஜனவரி மாதம் முழுவதும்: சில நாட்களுக்கு முன் இலக்கியத் திருவிழா நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை சார்பில்கலைத்திருவிழாவும் நடத்தப்பட் டது. ஜனவரி மாதம் முழுவதும் பண்பாட்டு விழுமியங்களை எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சியாக இவை உள்ளன.
கீழடி அகழ்வைப்பகம் இந்த மாதம் இல்லாவிட்டாலும் பிப்ரவரியில் தொடங்கப்படும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியும் சிறப்பானதாக அமைந்துள்ளது. மீண்டும் ஒரு எழுச்சியை இந்த தளங்களில் உருவாக்கியுள்ள கனிமொழிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், எம்பிக்கள், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டி யன், ஜெகத்ரட்சகன், சு.வெங்க டேசன், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, கலை பண்பாட்டுத் துறை செயலர் பி.சந்திரமோகன், தமிழ்வளர்ச்சித் துறை செயலர்இரா.செல்வராஜ் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் நன்றியுரையாற்றினார்.
முன்னதாக பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாடல், கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வரும் 17-ம் தேதி வரை இலக்கியச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT