Published : 14 Jan 2023 06:38 AM
Last Updated : 14 Jan 2023 06:38 AM

சென்னை புத்தகக் காட்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய மராத்தான் நூல் வெளியீடு

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய ‘ஓடலாம் வாங்க’ எனும் தமிழ் நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியீட்டு விழா, சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக் காட்சியின் திறந்தவெளி அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி  காந்த் நூலை வெளியிட, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் சிசில் மனோஜ் சுந்தர் பெற்றுக் கொண்டார். உடன், நடிகர்கள் பாண்டியராஜன், போஸ் வெங்கட், எழுத்தாளர் இந்துமதி, இசையமைப்பாளர்  காந்த் தேவா, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மராத்தான் ஓட்டம் குறித்து எழுதிய‘கம் லெட் அஸ் ரன்’ (ஓடலாம் வாங்க) எனும் ஆங்கில நூல் சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது 125 மராத்தான் ஓட்டங்கள் குறித்த அனுபவங்களை ‘ஓடலாம் வாங்க’ எனும் புத்தகமாக எழுதிஉள்ளார். கடந்தாண்டு வெளியிடப்பட்ட இந்நூலுக்கு நல்லவரவேற்பு கிடைத்ததை அடுத்து,புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

‘கம் லெட் அஸ் ரன்’ எனப் பெயரிடப்பட்ட ஆங்கில நூலின் வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியின் திறந்தவெளி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமாச்சாரி காந்த் நூலை வெளியிட, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் சிசில் மனோஜ் சுந்தர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது: தினமும்உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லை என்று கூறுபவர்களுக்கு இந்த புத்தகம் சாட்சியாக இருக்கும். 2004-ம் ஆண்டு எனக்கு ஏற்பட்ட விபத்தால் 5 மாதங்கள் நடக்கக்கூட முடியவில்லை.

ஒன்றை மணி நேரம் ஓட இலக்கு

அதன்பின்னர் மெல்ல, மெல்ல நடந்து தொடர் முயற்சியால் மராத்தான் ஓடும் அளவுக்கு முன்னேறினேன். இதுவரை 139 மராத்தான் ஓடியுள்ளேன். தனிமனித ஒழுக்கம், சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஒரு மனிதனுக்கு நீண்டஆயுளும், மகிழ்ச்சியான வாழ்வையும் வழங்கும்.

நமக்குத் திடமான இலக்கு இருந்தால்தான் வெற்றி பெற முடியும். எனவே, நடப்பாண்டில் தினமும் ஒன்றரை மணி நேரம் ஓடிவிட வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளேன். தற்போது மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தினமும் உடற்பயிற்சி செய்தால் ஆரோக்கியமான வாழ்வுகிடைக்கும். இந்த நூல் இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் ஊக்கமளிக்கும். அதன்மூலம் பலர் தினமும் ஓடத் தொடங்கினால், அதுவே எனக்குச் சிறந்த வெற்றியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

கின்னஸில் இடம்பெற வேண்டும்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது, ‘‘அமைச்சர் சுப்பிரமணியன் செய்தது மகத்தான சாதனையாகும். இதை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இந்நூல் இளைஞர்களுக்கு மிகுந்த உத்வேகம் அளிப்பதாக இருக்கும்’’ என்றார்.

நடிகர் பாண்டியராஜன் பேசும்போது, ‘‘நீரிழிவு நோய் பாதிப்புள்ள அமைச்சர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் காலில் ஏற்பட்ட பலத்த காயத்தால், இனி வேகமாக நடக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், தனது விடாமுயற்சியால் இன்று 139 மராத்தான் ஒட்டங்களைக் கடந்துள்ளார். அது அவரின் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x