Published : 14 Jan 2023 06:08 AM
Last Updated : 14 Jan 2023 06:08 AM

‘சக்தி கேந்திரா’ கூட்டத்தில் அடிதடி மோதல்: கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக நிர்வாகி நீக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பாலமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாவட்டத் தலைவர் அருள் தலைமையில் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் பாஜகவின் முக்கிய பிரிவான 'சக்தி கேந்திரா' எனும் பிரிவுக்கு துணைத் தலைவர் பதவிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பாஜக கிழக்கு ஒன்றியத் தலைவர் ராமச்சந்திரன் கோஷ்டியினரும், மாவட்ட பொதுச் செயலாளர் ரவி கோஷ்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. அப்போது இரு தரப்பினரும் நாற்காலிகளை வீசித் தாக்கிக் கொண்டனர். இதில் 20-க்கும்மேற்பட்ட நிர்வாகிகள் காயமடைந்தனர்.

இந்த கலவரத்திற்கு காரணமான கள்ளக்குறிச்சி மாவட்ட துணை செயலாளர் ஆரூர்ரவி மீது தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை நடவடிக்கை எடுத் துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட ஆரூர் ரவியை கட்சியின் அடிப் படை பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இரு தரப்பினரும் நாற்காலிகளை வீசித் தாக்கிக் கொண்டனர். நிர்வாகிகள்காயம் அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x