Published : 23 Dec 2016 08:44 AM
Last Updated : 23 Dec 2016 08:44 AM
வார்தா புயல் காரணமாக 80 மின்சார ரயில் நிலையங்கள் கடுமை யாக சேதம் அடைந்துள்ளன. இதனால் தெற்கு ரயில்வேக்கு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை தாக்கிய வார்தா புயலால் தண்டவாளங்களில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. ரயில்களை இயக்குவதற்கு மின்விநியோகம் செய்யும் தண் டையார்பேட்டை, தாம்பரம், நுங்கம்பாக்கம் ஆகிய துணை மின்நிலையங்களில் திடீரென பழுது ஏற்பட்டது.
புயல் பாதிப்பினால் 62 விரைவு ரயில்களின் சேவை ரத்து மற்றும் மின்சார ரயில்கள் இயக்காததால் தெற்கு ரயில்வேக்கு ரூ.4 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறிய தாவது:
சென்னை கோட்டத்தில் மட்டும் 180-க்கும் மேற்பட்ட ரயில் நிலை யங்கள் உள்ளன. இதில், 80 மின்சார ரயில் நிலையங் களில் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளன. மேற்கூரையின் ஒரு பகுதியில் சேதம் ஏற்பட்டாலும் அந்த ரயில் நிலையத்தில் இருக்கும் ஒட்டுமொத்த மேற்கூரையையே மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மின்சார ரயில் நிலையத்துக்கும் மேற் கூரைகளுக்கு மட்டுமே ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையில் செலவிட வேண்டி யிருக்கும்.
தற்போது சென்னை கடற்கரை செங்கல்பட்டு வரையில் - 19, சென்னை கடற்கரை வேளச் சேரியில் 20, சென்னை சென்ட்ரல் அரக்கோணம் 19, சென்னை கூடூர் வரையில் 22 என மொத்தம் 80 ரயில் நிலையங்களில் மேற் கூரைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க மட்டுமே ரூ.50 கோடி வரையில் செலவிட வேண்டி இருக்கும்.
எனவே, இந்த சேதத்தின் மதிப்பு ரூ.100 கோடியை தாண்டும் என நினைக்கிறோம். சேதத்துக்கான அறிக்கையை தயாரித்து ரயில்வே வாரியத்துக்கும், ரயில்வே அமைச்சகத்துக்கும் விரைவில் அனுப்பவுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT