Published : 13 Jan 2023 04:58 PM
Last Updated : 13 Jan 2023 04:58 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தைப்பூசத்தை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 5-ம் ஞாயிற்றுக்கிழமை இயங்கும் என பிறப்பிக்கப்பட்டிருந்த அனுமதிக்கு விலக்களிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 14.01.2023 சனிக்கிழமை அன்று ஒருநாள் மட்டும் செயல்பாட்டிலிருந்து விலக்கு அளித்தும், தைப்பூசம் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நிகழ உள்ள நிலையில் அன்றைய தினம் மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கிட ஏற்கெனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததற்கு விலக்களித்தும் உத்தரவிடுமாறு தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடமிருந்து கோரிக்கை வரப்பெற்றது.
இதனை ஏற்று, மேற்கூறிய 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 14.01.2023 (சனிக்கிழமை) அன்று செயல்படுவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. மேலும், மாநிலத்தில் செயல்படும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தைப்பூசத்தை முன்னிட்டு இயங்கிட ஏற்கனவே அரசால் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததற்கும் விலக்களிக்கப்படுகிறது. இவ்விரண்டு தினங்களைத் தவிர இனிவரும் சனிக்கிழமைகளில் மேற்சொன்ன 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT