Published : 13 Jan 2023 04:54 AM
Last Updated : 13 Jan 2023 04:54 AM

போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.7 கோடி ஊக்கத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் 1.17 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.7.01 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் கே.கோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்துஅறிவுரை பணிக்குழு ஆகியஅனைத்து நிறுவனங்களிலும் தற்போது ஒரு லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

‘சாதனை ஊக்கத் தொகை’: அவர்களில் 2022-ம் ஆண்டில் 91 முதல் 151 நாட்கள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.85 வீதமும், 151 முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வீதமும் பொங்கல் ‘சாதனை ஊக்கத் தொகை' வழங்கப்படும்.

இந்த உத்தரவின்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 129 பணியாளர்களுக்கு, மொத்தம் ரூ.7 கோடியே ஒரு லட்சம் சாதனைஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தத் தொகை முதல்வரின் உத்தரவுக்கு இணங்க வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x