Published : 12 Jan 2023 11:25 AM
Last Updated : 12 Jan 2023 11:25 AM

உலகக் கோப்பை கபடி போட்டிகளை தமிழகத்தில் நடத்த நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

பேரவையில் பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்

சென்னை: உலகக் கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்றைய (ஜன.12) கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூரில் நவீன வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," திருப்பூரில் 1,500 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பார்வையாளர் மாடம் பணிகள் முடிக்கப்பட்டு ஏப்ரலில் திறக்கப்படும்" என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்,"உலகக் கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளை உள்ளடக்கிய ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளுக்கான ஆயத்தப்பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்" என்று பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x