Published : 11 Jan 2023 05:37 PM
Last Updated : 11 Jan 2023 05:37 PM

100 கி.மீ வேகத்தை கூட தாண்டாத ‘வந்தே பாரத்’ ரயில்கள் - அதிகபட்சமே 94 கி.மீ தான்!

வந்தே பாரத் விரைவு ரயில் | கோப்புப் படம்

சென்னை: இந்தியாவில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் தற்போது வரை 100 கி.மீ வேகத்தை கூட தாண்டவில்லை என்று தெரியவந்துள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-ல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த வகையான ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டன.

இதன் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை - காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்திலும், 5-வது சேவை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்திலும், 6-வது சேவை நாக்பூர் - பிலாஸ்பூர் வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிபட்சமாக 180 கி.மீ வரை இயக்கும் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில்கள், தற்போது வரை 100 கி.மீட்டர் என்ற சராசரி வேகத்தை கூட தாண்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் விவரம்:

டெல்லி - வாரணாசி

  • மொத்தம் தூரம் - 757 கி.மீ
  • பயண தூரம் - 8 மணி நேரம்
  • சரசாரி வேகம் - 94.60 கி.மீ

டெல்லி - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி

  • மொத்தம் தூரம் - 655 கி.மீ
  • பயண தூரம் - 8 மணி நேரம்
  • சரசாரி வேகம் - 81.82 கி.மீ

மும்பை - காந்தி நகர்

  • மொத்தம் தூரம் - 519 கி.மீ
  • பயண தூரம் - 6.15 மணி நேரம்
  • சரசாரி வேகம் - 83.02 கி.மீ

உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி

  • மொத்தம் தூரம் - 412 கி.மீ
  • பயண தூரம் - 5.25 மணி நேரம்
  • சரசாரி வேகம் - 78.43 கி.மீ

சென்னை - மைசூரு

  • மொத்தம் தூரம் - 504 கி.மீ
  • பயண தூரம் - 6.30 மணி நேரம்
  • சரசாரி வேகம் - 77.59 கி.மீ

நாக்பூர் - பிலாஸ்பூர்

  • மொத்தம் தூரம் - 411 கி.மீ
  • பயண தூரம் - 5.50 மணி நேரம்
  • சரசாரி வேகம் - 74.77 கி.மீ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x