Published : 09 Jan 2023 05:57 PM
Last Updated : 09 Jan 2023 05:57 PM

ஆளுநர் சட்டப்பேரவை மட்டுமின்றி தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம்: வேல்முருகன்

வேல்முருகன் | கோப்புப்படம்

சென்னை: "எனது நிலத்திற்கான, எனது மக்களுக்கான அரசியல் செய்ய தெரியாத ஆளுநரை, குடியரசுத் தலைவர் திரும்ப பெற வேண்டும் என்பதே சிறந்த முடிவாக இருக்கும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதல்வர் , சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும்போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும், அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

சமூக நீ்தி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்க, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு விருப்பம் இல்லை என்றால், சட்டப்பேரவையை விட்டு மட்டுமின்றி, தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம்.

தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த ஓர் அரசை, இம்மண்ணுக்கான அரசியல் தெரியாத ஆளுநர் ஆர்.என்.ரவி இழிவுப்படுத்தியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தியதை போன்று தான்.தமிழ்நாட்டுக்கு வந்ததில் இருந்தே, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ்-ன் உறுப்பினராக தான் இதுவரை செயல்பட்டு வருகிறாரே ஒழிய, ஆளுநராக ஒருபோதும் செயலாற்றவில்லை.

ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்றுதான். முதல் கட்டமாக ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாட்டிலிருந்து மாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, முதல்வர் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே வெளியேறிய ஆளுநர், தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

எனது நிலத்திற்கான, எனது மக்களுக்கான அரசியல் செய்ய தெரியாத ஆளுநரை, குடியரசுத் தலைவர் திரும்ப பெற வேண்டும் என்பதே சிறந்த முடிவாக இருக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x