Published : 21 Dec 2016 09:59 AM
Last Updated : 21 Dec 2016 09:59 AM
மதுரை, கன்னியாகுமரி, ராமேசுவரம், கொடைக்கானல் இடையே சுற்றுலாவை ஊக்குவிக்க ஒரு நாள், அரைநாள் ‘சுற்றுலா பேக்கேஜ்’ முறையில் பயணிகளை அழைத்துச் செல்லும் திட்டம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் விரைவில் தொடங்கப்படுகிறது.
தென் தமிழகத்தில் மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி மற்றும் கொடைக்கானல் போன்றவை பிரசித்தி பெற்ற சுற்றுலா நகரங்களாக விளங்குகின்றன. வெளி நாடுகள், வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.
தூங்கா நகர், கோயில் நகர், தொண்மை நகர் என பல்வேறு அடையாளங்களுடன் அழைக்கப் படும் மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், திரு மலைநாயக்கர் மகால், காந்தி மியூசியம், மாரியம்மன் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர் கோயில் போன்றவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.
இங்கு கடந்த 2015-ல் 10 லட்சத் தும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும், 88 ஆயிரத்து 279 வெளிநாட்டு பயணிகளும் வந்துள்ளனர். 2014-ம் ஆண்டை ஒப்பிடும்போது இந்த வருகை குறைவாகும். இந்த ஆண்டு அது மேலும் குறையும் என கூறப்படுகிறது.
இதேபோல், கொடைக்கான லுக்கு 2014-ல் 53 லட்சம் உள்நாடு மற்றும் 51 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், இது 2015-ல், 42 லட்சம் உள்நாட்டு பயணிகள் மற்றும் 23 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளாக குறைந்தது. இவ்வாண்டு இன்னும் குறையும் என கூறப்படுகிறது. வாகன போக்குவரத்து வசதி, தங்குமிடம் வசதி, மாறுபட்ட தட்பவெப்பநிலை போன்ற காரணங்களால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து கொண்டே வருகிறது.
மதுரைக்கு வருவோர், கொடைக்கானல், ராமேசுவரம், கன்னியாகுமரிக்குச் செல்வது மிகுந்த சிரமமாக இருப்பதால், தென்மாநில சுற்றுலாத்தலங் களை இணைக்கும் வகையில், வெளிநாட்டு சுற்றுலாப் பய ணிகளைக் குறிவைத்து ஹெலி காப்டர் சுற்றுலா அறிமுகப்படுத் துவதற்கான நடவடிக்கை தமிழ் நாடு சுற்றுலாத்துறை சார்பில் எடுக்கப்பட்டது. இந்த திட்டம், இன்னும் ஆய்வு அளவிலேயே நிற்கிறது.
இந்நிலையில், அந்த திட்டத் துக்கு முன்னோட்டமாக மதுரை யில் இருந்து ராமேசுவரம், கன் னியாகுமரி, கொடைக்கானலுக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல ஒருநாள் மற்றும் அரை நாள் ‘சுற்றுலாப் பேக்கேஜ்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த திட்டம் நடைமுறையில் இருந்தது. அதன்பின், தனியார் சுற்றுலா டிராவல்ஸ்களின் அசுர வளர்ச்சியால் இந்த திட்டம் வரவேற்பு இல்லாமல் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்த அரசு கவனத்துக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம்.
சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கையை அதிகரிக்கவும், சுற்றுலா நகரங்களை மேம்படுத் தவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும். மதுரைக்குள் அரை நாள் சுற்றுலாப் பேக்கேஜ் செயல்படுத்தப்படுகிறது. விரும் பினால் ஒருநாள் பேக்கேஜாக கொடைக்கானல், ராமேசுவரம், கன்னியாகுமரி போன்ற சுற்றுலா நகரங்களுக்கு பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா வழிகாட்டுதலுடன் அழைத்து செல்லவும் திட்டமுள்ளது என்று அவர் கூறினார்.
பறக்கும் சுற்றுலா என்னாச்சு ?
2011-16 ஆட்சியில் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, மதுரையில் இருந்து கொடைக்கானல், ராமேசுவரம், கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டர் மூலம் பறக்கும் சுற்றுலா திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க சின்னப்பள்ளம் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலம் பார்க்கப்பட்டது. அதன்பின் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஹெலிகாப்டர் சுற்றுலாவில் பெரும்பாலும் தொழில் அதிபர்கள், வெளிநாட்டினர் மட்டுமே பங்கேற்க வாய்ப்புள்ளதாலும். பெரியளவில் வருவாய்க்கு வாய்ப்பு இல்லை என கருதப்படுவதாலும் இத்திட்டம் முழு செயல்வடிவம் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT