Published : 07 Jan 2023 01:59 PM
Last Updated : 07 Jan 2023 01:59 PM

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: “2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிஹாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. மொத்தம் 12.7 கோடி பேரின் விவரங்கள் இந்த கணக்கெடுப்பின் மூலம் திரட்டப்படவுள்ளன. இந்தியாவின் மிக நீண்ட சமூக நீதி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் பிஹார் மாநில அரசுக்கு எனது பாராட்டுகள்.

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் இரு கட்டங்களாக 45 நாட்கள் நடைபெறவிருக்கின்றன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். சாதி, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்தக் கணக்கெடுப்பில் திரட்டப்படவுள்ளன.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் சாத்தியமற்றவை என்பதை முறியடிக்கப்போகும் இரண்டாவது மாநிலம் பிஹார். ஏற்கெனவே கர்நாடகம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியம் தான் என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை. எனவே, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x