Published : 29 Dec 2016 11:53 AM
Last Updated : 29 Dec 2016 11:53 AM
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் சத்தமில்லாமல் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 6, 726 டாஸ்மாக் கடைகள் இருந்தன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை தேர்தலில், டாஸ்மாக் கடைகள் படிபடியாக அகற்றப்படும் என்றார். வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் அவர் கூறியபடி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், குடியிருப்புகள் அருகே இருந்த 500 கடைகளை மூடினார்.
உயர் நீதிமன்ற நெருக்கடியால் ஏற்கெனவே தமிழகத்தில் இருக்கும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருந்த டாஸ்மாக் கடைகள் கணக்கெடுக்கப்பட்டதில் 2 ஆயிரம் கடைகள் இருப்பது கண்டறிய ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறைவான கடைகள் மட்டுமே அகற்றப்பட்டதாகவும், மற்ற கடைகளை அகற்றப்படாமலே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரமு ள்ள டாஸ்மாக் கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால், தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மதுரை அய்யர் பங்களாவில் மதுரை- நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவால் கடைகள் மூடப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் மதுரையில் அதற்கு நேர் மாறாக புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல், மதுரை அழகர்கோவில் அருகே மூடப்பட்ட ஒரு டாஸ்மாக் கடையும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: நெடு ஞ்சாலையில் 1,500 அடி (500மீட்டர்) தொலைவில் டாஸ்மாக் கடை இருக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் எங்கும் பின்ப ற்றப்படவில்லை. ஜெய லலிதா 500 கடைகளை மூடியதால் விற்பனை குறையவில்லை. அதற்கு எதிர்மறையாக கடந்த ஆண்டடைக்காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 8 சதவீதம் விற்பனை கூடியுள்ளது. முன்பு காலை10 மணி முதல் இரவு 10 மணி வரை கடை திறந்திருந்தது. தற்போது பகல் 12 மணிக்கு கடை திறக்கப்படுகிறது. அதனால், விடி யவிடிய பார், மற்ற இடங்களில் மதுபானம் கிடைக்கின்றன. கடந்த காலங்களில் போலி மதுபானம் அதிகளவில் விற்கப்பட்டது. தற்போது அதிகாரிகள் கெடுபி டியால் போலி மதுபாட்டில் விற்பனை குறைந்துள்ளது. இந்த காரணங்களால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும், மது விற்பனை குறையவில்லை. டாஸ் மாக் கடைகள் மூடப்படுவதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், எல்லோருக்கும் மாற்றுப்பணி வேண்டும் என்றனர்.
அவகாசம் இருக்கிறது
இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி கூறியது, அழகர்கோவில் சாலையில் மூடிய கடை வலையபட்டி கிராமத்தில் இருந்தது. தற்போது திறந்துள்ளது அயத்தம்பட்டி கிராமம். இந்த கடையின் வருவாய் கிராமம் வேறு. அந்த கடையின் வருவாய் கிராமம் வேறு. அதுபோல், மாட்டுத்தாவணியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையால் மூடப்பட்ட கடை, அய்யர் பங்களாவுக்கு மாற்றப்பட்டது. இந்த கடை மாநில நெடுஞ்சாலையில்தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் மார்ச் 31 வரை தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை அகற்ற காலஅவகாசம் கொடுத்துள்ளதால் தற்காலிகமாகத்தான் அய்யர்பங்களா கடை அந்த இடத்தில் செயல்படுகிறது. மார்ச் 31-க்குள் அகற்றப்படும். ஜெயலலிதா மூடிய கடைகள் திறக்கப்படவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT