Published : 06 Jan 2023 06:14 AM
Last Updated : 06 Jan 2023 06:14 AM
அரூர்: தருமபுாி மாவட்டம் கம்பைநல்லூர் அருகேயுள்ள வெதரம்பட்டியில் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள புதிா் நிலை இன்றும் மக்களால் வழிபாட்டு மையமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டையகால பெருமையை சுமந்து நிற்கும் புதிர் நிலையை ஏழு சுற்று கோயில் என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
பல்வேறு வடிவங்களில் புதிர் நிலைகள் உள்ள நிலையில், வெதரம்பட்டியில் இருப்பது சதுர வடிவ புதிர் நிலையாகும். நாட்டிலேயே மிகப்பெரியதாக சுமார் 1,600 சதுரஅடி பரப்பில் அமைந்துள்ள புதிர் நிலை இது எனக்கூறப்படுகிறது.
கற்பாதைகளின் வழியாக நடந்து சென்று அங்குள்ள விநாயகர் சிலையை அடைந்தால் அவர்கள் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. கற்களை தாண்டினாலோ அல்லது மிதித்து சென்றாலோ முயற்சி தோல்வியுறும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தொல்லியல் துறையினா் கூறியதாவது; பண்டைய போா்க்கால வாழ்வியலை இந்த புதிர்நிலை பறை சாற்றுகிறது. போருக்கு செல்பவர்கள் இந்த வழியில் நடந்து சென்று இறைவனை வழிபட்டு சென்றால் போரில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது தவிர 1,500 முதல் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படும் இந்த சதுர புதிர் நிலை, அக்காலத்தில் வணிக வழிப்பாதையின் முக்கிய இடங்களில் இது போன்று அக்கால மன்னா்களால் அமைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தகடூரை ஆண்ட மன்னர் அதியமான் காலத்தின் போது இந்த புதிர் நிலை வழியாக முக்கிய வணிக பாதை இருந்திருக்கும், என்றனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் இங்குள்ள சுற்று விநாயகரை குல தெய்வமாக வழிபடும் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் சுற்று விநாயகரை குல தெய்வமாக வழிபடும் மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT