Published : 17 Dec 2016 09:13 AM
Last Updated : 17 Dec 2016 09:13 AM
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி குழும சூரிய மின் திட்டம் மூலம் 623.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதானி குழுமம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சூரிய சக்தி, நீர் மின் திட்டம், காற்றாலை மின் திட்டம் உள்ளிட்ட மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் கமுதி- சாயல்குடி சாலையில் செங்கப்படை, செந்த னேந்தல், தாதாகுளம், குண்டு குளம், சொக்கலிங்கபுரம், ஒழுகு புளி, புதுக்கோட்டை, தோப்படைப் பட்டி, ஊ.கரிசல்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 2,500 ஏக்கரில் அதானி கிரீன் எனர்ஜி என்கிற பெயரில் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவியுள்ளது. இங்கு ரூ.4,550 கோடி மதிப்பில் 648 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கியது.
ஒரே இடத்தில் 72 மெகாகிரீன் எனர்ஜி நிறுவனம் 2.5 லட்சம் மில்லி யன் சூரிய சக்தி மின் தகடுகள் (சோலார் மாடுல்கள்) அமைத்துள் ளது. உலகின் பல்வேறு நாடுக ளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட இயந்திரங்கள், கருவிகள் இந்த மின்திட்டத்தில் பயன்படுத் தப்பட்டுள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழக மின்வாரியத்துக்கு வழங் கப்படுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் கி.சின்னதுரை கூறியதாவது: இந்தியாவிலேயே கமுதி பகுதியில்தான் சூரிய ஒளியின் கதிர்வீச்சு (சோலார் ரேடியேஷன்) அதிக அளவில் இருப்பதாகக் கணக் கிடப்பட்டுள்ளது. இதற்காக அதானி நிறுவனம் இந்த மின்திட்டத்தை இங்கு அமைத்துள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்காக தமிழ்நாடு மின்வாரியம் ரூ.400 கோடி மதிப்பில் 400 கே.வி. திறன் கொண்ட துணை மின் நிலையத்தை அமைத்துள்ளது. துணை மின் நிலையத்தில் இருந்து மின் தொகுப்பு மையங்களுக்கு மின்சாரத்தை அனுப்பி பல்வேறு பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு தற்போது அதிகபட்சமாக 623.5 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டி உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT