Published : 18 Apr 2014 12:40 PM
Last Updated : 18 Apr 2014 12:40 PM

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ’பாரதி சாரணர்’ குழு வாகனப் பேரணி

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்து மேல் நிலை பள்ளியில் அமைந்திருக்கும் ‘பாரதி சாரணர்’ குழு, 40வது ஆண்டைக் கடந்து வெற்றிகரமாக தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக ’பாரதி சாரணர்’ குழு, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்களிப்பதன் நோக்கத்தை மக்களிடையே உணர்த்துவதற்கான வாகன விழிப்புணர்வுப் பேரணியை நடத்த ஏற்பாடு செய்தது.

’நம் வாக்கு - நம் உரிமை’ என்ற கருப்பொருளை மக்களிடையே உணர்த்த, சென்னையிருந்து நெல்லூர் வரை இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்ய இந்தக் குழு திட்டமிட்டது. இதன்படி இந்த வாகன விழிப்புணர்வு பயணத்தில் ’பாரதி சாரணர்’ குழுவின் ஸ்ரீகாந்த், வெங்கடேசன், தங்கராஜ், விக்னேஷ் மற்றும் உமேஷ் ஆகிய 8 சாரணர்கள் பேரணியை நடத்தி வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளனர்.

இந்த வாகனப் பேரணியை இக்குழுவின் தலைவர் பாலசுப்ரமணியம் கொடி அசைத்து, முதல் விழிப்புணர்வு பதாகையைப் பெற்று ஆரம்பித்து வைத்தார்.

சென்னையிருந்து நெல்லூர் வரை இரு சக்கர வாகனத்தில் சென்ற சாரணர்கள்,வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மக்களிடையே உணர்த்தும் வகையில் பதாகைகளை வாகனத்தில் ஏந்தி சென்றனர். பொது மக்களிடம் அவர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பிரசுரங்களை விநியோகித்தனர்.

இப்பேரணி 13- ம் தேதி காலை 3.30 மணி அளவில் சென்னை, திருவல்லிக்கேணியில் தொடங்கப்பட்டு அதே தினத்தில் இரவு 9 மணி அளவில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x