Published : 03 Jan 2023 12:59 PM
Last Updated : 03 Jan 2023 12:59 PM
சென்னை: ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த பொம்மைககளை பிஐஎஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தளர்.
இந்திய தர நிர்ணய அமைவன சட்டம் 2016 பிரிவு 28 இன் படி கடைகளில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாத பொம்மைகளை விற்பனை செய்யக் கூடாது. அப்படி விற்பனை செய்பவர்களுக்கு BIS சட்டம், 2016 பிரிவு 29 இன் படி, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 2 லட்சத்திற்கு குறையாத அபராதம் விதிக்கப்படும். அல்லது பொருட்களின் மதிப்பில் பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் (T1 ) உள்ள Tiara Toys Zone, Tiara Trading Company என்ற கடையில் பிஐஎஸ் அதிகாரிகள் நேற்று (ஜன.2) இரவு அதிரடிச் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாமல் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 198 மின்சாரம் அல்லாத பொம்மைகள் மற்றும் 129 எலக்ட்ரிக் பொம்மைகள் என்று மொத்தம் 327 பொம்மைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், பொது மக்கள் பிஐஎஸ் தொடர்பான புகார்களை, பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கும், BIS Care செயலியிலும், cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT