Published : 03 Jan 2023 04:46 AM
Last Updated : 03 Jan 2023 04:46 AM
சென்னை: நுகர்வோர் வசதி மற்றும் மின்வாரியத்தின் வருவாயை பெருக்கும் நோக்கில் கூடுதலாக பிரிவு அலுவலகங்களை அமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 12 மண்டலங்களில் 2,811 பிரிவு அலுவலகங்களை மின்வாரியம் அமைத்துள்ளது. இதில், ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இதனால், பிறஇடங்களில் உள்ள மின்நுகர்வோர் தங்களது மின்சாரம் தொடர்பான புகார், குறைகளை தெரிவிக்க சிரமப்படுகின்றனர்.
எனவே, மின்நுகர்வோர்களின் வசதிக்காக கூடுதல் பிரிவு அலுவலகங்கள் அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், குறைவாக உள்ளமின்வாரியத்தின் வருவாயைஅதிகரிக்கும் வகையிலும் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சில பிரிவு அலுவலகங்கள் இரண்டாகவும் அல்லது மூன்றாகவும் பிரிக்கப்பட உள்ளது. அதேபோல், தற்போது உள்ள 176 மண்டல அலுவலகங்களை 220 ஆகவும் அதிகரிக்கப்படும்.
பிரிவு அலுவலகம் அதிகரிப்பதன் மூலம் ஊழியர்களுடைய பணிச் சுமை குறைக்கப்படும். இதன்படி, ஒரு பிரிவு அலுவலகத்தில் 16 ஆயிரம் மின்இணைப்புகளும், 120 மின்மாற்றிகள் மட்டுமே கையாளப்படும்.
மேலும், பிரிவு அலுவலகங்களில் கூடுதலாக உள்ள ஊழியர்கள் புதிதாக அமைக்கப்படும் பிரிவு அலுவலகங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவர் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT