Published : 02 Jan 2023 04:11 PM
Last Updated : 02 Jan 2023 04:11 PM
சென்னை: திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," திமுகவின் பொதுக் கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள், பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத, காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்.இது போன்ற தொடர் சம்பவங்கள் , இவரது திமுக ஆட்சியில் சாமானிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, நம்மை காக்கும் பெண்களை நாமே காக்க வேண்டிய சூழ்நிலை. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து,கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்." இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலர்களை பாலியல் ரீதீயாக துன்புறுத்திய திமுக நிர்வாகிகள்,
பாதுகாப்பு தருபவர்களையே தன் கட்சியினரிடம் இருந்து பாதுகாக்க முடியாத,
காவல்துறையையின் பொறுப்பாளராக இருக்ககூடிய இந்த கையாளாகாத முதல்வருக்கு எனது கடுமையான கண்டனங்கள்,@mkstalin
1/2— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 2, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT