Published : 02 Jan 2023 05:56 AM
Last Updated : 02 Jan 2023 05:56 AM
சென்னை: தமிழகத்தில் 46 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவு.
1999 பேட்ச் அதிகாரிகளான, உலக வர்த்தக நிறுவன இந்தியப் பிரதிநிதி பிரஜேந்திர நவ்நீத், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி, சமூக நலத் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, கோவை ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் தேவ்ராஜ் தேவ் ஆகியோர் முதன்மைச் செயலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
2007 பேட்ச் அதிகாரிகளான, வேலைவாய்ப்பு, பயிற்சி ஆணையர் கே.வீரராகவராவ், பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார், மத்திய அரசு பணியில் உள்ள ஜி.லதா, சிப்காட் மேலாண் இயக்குநர் இ.சுந்தரவல்லி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் இ.சரவணவேல்ராஜ், ஆவின் மேலாண் இயக்குநர் என்.சுப்பையன், குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி சிறப்பு கால நிலை தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
2010 பேட்ச் அதிகாரிகளான, மயிலாடுதுறை ஆட்சியர் ஆர்.லலிதா, மின் ஆளுமை இயக்குநர் பிரவீன் பி.நாயர், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், மத்திய அரசுபணியில் உள்ள சுபோத்குமார், டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ், விடுப்பில் உள்ள ராஷ்மி சித்தார்த் ஜகதே, நில நிர்வாக கூடுதல் ஆணையர் எஸ்.செந்தாமரை, அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் ஆர்.கண்ணன், வேளாண் வணிக இயக்குநர் எஸ்.நடராஜன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநர் ஏ.சிவஞானம், போக்குவரத்து ஆணையர் எல்.நிர்மல்ராஜ், பேரிடர் மேலாண்மை இயக்குநர் எஸ்.ஏ.ராமன், வேளாண் இயக்குநர் ஏ.அண்ணாதுரை, பதிவுத் துறை தலைவர் எம்.பி.சிவனருள் ஆகியோருக்கு தேர்வுநிலை பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
2014 பேட்ச் அதிகாரிகளான, ஆட்சியர்கள் ஜானி டாம் வர்கீஸ் (ராமநாதபுரம்), பி.ஆகாஷ் (தென்காசி), எம்.பிரதீப்குமார் (திருச்சி), ஸ்ரவன் குமார் ஜடாவத் (கள்ளக்குறிச்சி), எஸ்.விசாகன் (திண்டுக்கல்), பி.குமரவேல் பாண்டியன்(வேலூர்), டி.பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை), மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப், எஸ்டிஏடி உறுப்பினர் - செயலர் கே.பி.கார்த்திகேயன், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், தொழில், வணிகத் துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்லிண்டிகி பச்சாவ்,உணவுப் பொருள் வழங்கல் இணை மேலாண் இயக்குநர் கே.கற்பகம், வீட்டுவசதி துணை செயலர் ஜெ.ஆனி மேரி ஸ்வர்ணா, ஆகியோர் இளநிலை நிர்வாக தர பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
2019 பேட்ச் அதிகாரிகளான கூடுதல் ஆட்சியர்கள் சி.ஏ.ரிஷப் (திருவள்ளூர்), வீர் பிரதாப் சிங் (திருவண்ணாமலை), வி.தீபனவிஸ்வேஸ்வரி (தருமபுரி), சித்ரா விஜயன் (விழுப்புரம்), பி.அலர்மேல்மங்கை (கோவை), தாக்கரே சுபம் தயான்தே ராவ் (தூத்துக்குடி),எம்.பிரதிவிராஜ் (நாகை), சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையர் எம்.பி.அமித் ஆகியோருக்கு முதுநிலை காலநிலை தரத்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment