Last Updated : 01 Jan, 2023 02:35 PM

1  

Published : 01 Jan 2023 02:35 PM
Last Updated : 01 Jan 2023 02:35 PM

புதுச்சேரி | பாண்லே பால் விற்பனை நிறுத்தம்; புத்தாண்டில் மக்கள் அவதி: மாலை முதல் சீராக வாய்ப்பு 

பிரதிநிதித்துவப் படம்.

புதுச்சேரி: புதுச்சேரியில் பாண்லே பால் பாக்கெட் விற்பதை முகவர்கள் நிறுத்தியதால் புத்தாண்டில் மக்கள் கடும் அவதியடைந்தனர். பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால் மாலை முதல் நிலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லேயில் மக்களுக்கு பாக்கெட் பால் வழங்கப்பட்டு வருகிறது. பால் தட்டுப்பாடு காரணமாக பால் சீராக விநியோகிக்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கம் போல் தட்டுப்பாடு இல்லாமலும், காலதாமதமின்றி பால் தரக்கோரினர்.

ஏஐடியுசி பாண்லே முகவர்கள் சங்கம் சார்பில் நேற்றைய தினம் தேவையான அளவிற்கு பாலினை வழங்காமல் நேரம் தவறி வழங்கப்பட்டு வந்ததை கண்டித்து புதுச்சேரி ஐயங்குட்டிபாளையத்தில் உள்ள பாண்லே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் பாண்லே பால் வாங்கி விற்பதில்லை என முடிவெடுத்தனர். நேற்று மாலை (31/12/22) தொடர்ந்து இன்று காலை 01/01/23 பால் வாங்கப்படவில்லை, இதனால் பாண்லே பால் விற்பதை நிறுத்தி சிலர் தனியார் பாலை இன்று விற்றனர்.

இதனை தொடர்ந்து இன்று பாண்லே தற்காலிக இயக்குநர் ஜோதிராஜன் உடன் மாநில பொதுச்செயலர் சேதுசெல்வம், பாண்லே முகவர்கள் சங்கத்தலைவர் கலைமாமணி மற்றும் நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது இந்த பேச்சுவார்த்தையின் போது இயக்குநர், முகவர்களுக்கு தேவையான பாலினை வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதி தந்தார். பாண்லே பாலை சரியான நேரத்திற்கு கொடுப்பதற்கு ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முகவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்ததால், இந்த பிரச்சனையை ஒரு சில தினங்களுக்குள் சரி செய்து விடுவதாக அளித்த வாக்குறுதியின் பெயரில் போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x