Published : 31 Dec 2022 05:25 AM
Last Updated : 31 Dec 2022 05:25 AM

மார்கழி மாத வண்ணக் கோலப்போட்டி - கடைசி நாள் ஜன.10 வரை நீட்டிப்பு

சென்னை: அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் - காஞ்சிபுரம், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மார்கழி மாத வண்ணக் கோலப்போட்டியை நடத்துகிறது. இப்போட்டிக்கான படங்களை அனுப்ப ஜன.5-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பலரின் வேண்டுகோளை ஏற்று, கோலப் படங்களை அனுப்ப கடைசி நாள் ஜன.10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்கழி மாதத்தில் நம் வீடுகளின் வாசலில் அழகான வண்ணக் கோலங்களைப் போடுவது வழக்கம். அதில் சிறந்த கோலங்களுக்கு பரிசு வழங்கும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. தங்கள் வீட்டில் போட்ட வண்ணக்கோலத்தையும் வீட்டையும் ஒரு படமாகவும், கோலத்தை மட்டும் ஒரு படமாகவும் எடுத்து, இரு படங்களாக அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் வாசகரின் வீட்டுக்கு வந்து, மீண்டும் கோலத்தைப் போட்டுக்காட்ட சொல்வார்கள்.

சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், கோவை, சேலம், நெல்லை, புதுச்சேரி என 8 மண்டலங்களாகப் பிரித்து கோலங்கள் தேர்வு செய்யப்படும். சிறந்த கோலத்துக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

கோலங்களை அனுப்பும் போது,தங்கள் பெயர், முகவரி,தொலைபேசி எண் ஆகியவற்றையும் சேர்த்து அனுப்ப வேண்டும். தனிநபர் வரைந்த கோலங்கள் மட்டுமே ஏற்கப்படும். குழுவாக சேர்ந்து போடும் கோலங்கள் ஏற்கப்பட மாட்டாது.

கோலங்களை kolampotti@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது https://www.htamil.org/ kolampotti என்ற லிங்க்கின் மூலமாகவோ அனுப்ப வேண்டும். 9940699401 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘Hi‘ என்று அனுப்பி போட்டி பற்றிய கூடுதல் விவரம் பெறலாம்.

அறிஞர் அண்ணா பட்டு கூடடுறவு சங்கம், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ வழங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x