Published : 30 Dec 2022 05:02 AM
Last Updated : 30 Dec 2022 05:02 AM

மின்வாரிய ஊழியர் ஊதிய உயர்வு - ஜன.3-ல் பேச்சுவார்த்தை

சென்னை: மின்வாரிய ஊழியர் ஊதிய உயர்வு தொடர்பாக ஜன.3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

‘கடந்த 2019-ம் ஆண்டு டிச.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் ஜன.3-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ள பேச்சுவார்த்தைக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் இருதரப்பினரும் ஆஜராக வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x