Published : 26 Dec 2016 10:18 AM
Last Updated : 26 Dec 2016 10:18 AM

தமிழகத்தில் மாம்பழம் உற்பத்தி குறையும் அபாயம்: பூ பூக்க தொடங்காததால் விவசாயிகள் கவலை

உலகளவில் இந்தியாவில் 40 சதவீதம் மாம்பழம் உற்பத்தியாகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திண்டுக்கல், திருவண்ணா மலை உட்பட தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஹெக் டேரில் மா சாகுபடி நடக்கிறது. இந்த மரங்களில் இருந்து ஆண் டுக்கு 5.3 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தியாகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 50 ஆயிரம் ஹெக் டேரில் மா விவசாயம் நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேரில் மானாவாரியாகவும், 400 ஹெக்டேரில் ‘அடர் நடவு’ முறையிலும் (நெருக்கமாக) மா விவசாயம் நடக்கிறது. மாம் பழங்களில் செந்தூரா, காசா, கல் லாமை (பெங்களூரா), பங்கனப் பள்ளி, மல்கோவா மற்றும் உள்ளூர் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள் ளனர்.

கடந்த சில ஆண்டாகவே போதிய மழையில்லாமல் வறட்சியால் மா மரங்கள், அழிந்து வருகின்றன. மா மரங்களைக் காப்பாற்ற முடியா மல் விவசாயிகள், மாற்று விவசாயத்துக்கும் மாறி வருகின்ற னர். இந்நிலையில் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் இருக்கிற மா மரங்களையும் காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் அழகர் கோவில், மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி போன்ற பகுதியில் வறட்சியால் மா மரங்கள் பட்டு பாழாகி வருகின்றன. தற்போது மா மரங்கள், அடுத்து வரும் மாம்பழ பருவத்துக்காக பூக்க வேண்டிய தருணம். டிசம்பர் முதல் வாரத்தில் பூக்க ஆரம்பித்து, மூன்றாம், நான்காம் வாரம் வரை பூக்கும். இதில் நிறைய இடங்களில் இந்த ஆண்டு சரியாக பூ பூக்கவில்லை. பருவநிலை மாற்றம், மழையில்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து மண்ணில் குறைந்த ஈரப்பதம், பூ பூப்பது, பூ காயாக மாறுவதற்கு தேவைப்படும் சத்துப்பொருட்கள், நுண்ணுயிர்களைக் கொடுப்பதற் கான தண்ணீர் இல்லாமையாலும், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும் மரங்களில் பூ பூப்பது தடைப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது பூக்கும் மரங்களில் ஏப்ரல் மாதம் முதல் மாம் பழங்களைப் பறிக்கலாம். ஆனால், மரங்கள் பட்டும், பூ பூக்காமலும் இருப்பதால் வரும் பருவகாலத்தில் மா உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் பூபதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

வறட்சி பொதுவாக தோட்டக் கலைப் பயிர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தற் போதைய வறட்சி மா விவசாயத் தைப் பாதிக்காது. ஒருசில இடங் களில் பூக்காததை வைத்துக் கொண்டு மொத்தமாக மகசூல் குறையும் என கூற முடியாது. மா மரங்களில் புது தளிர்விட்டிருந்தால் பூக்கள் வராது. தளிர் விடும் மரங்களில் அடுத்த பருவத்தில் பூ பூத்து காய் காய்க்கும்.

ஜனவரி 15 வரை புதுதளிர் வராமலும் மரங்கள் பூக்காமல் இருந்தால் யூரியா கரைசல் 5 கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மரங்களில் தெளிக்க வேண்டும். மா மரங்களில் தற்போது பூ பூப்பதை வைத்து மகசூலை கணித்துவிடலாம் என்றார்.

பருவம் தவறி காய்க்கும் மரங்கள் அழியும்

துணை இயக்குநர் பூபதி கூறுகையில், மா மரத்தில் ஒரு பருவத்தில் மட்டுமே பழங்கள் அறுவடை காலம் உண்டு. இரண்டு பருவ காலம் கிடையாது. விவசாயிகள் மரங்களில் ‘கல்டார்’ என்ற ஒரு வகை ரசாயனத்தை தெளித்து பழங்கள் பருவ காலம் இல்லாதபோது பூ பூக்க வைக்கின்றனர். பூக்காத, காய் காய்க்காத மலட்டு மரங்களில் மட்டுமே இந்த ரசாயனத்தை பயன்படுத்தலாம். ஆனால், விவசாயிகள், இந்த ரசாயனத்தை பயன்படுத்தி மற்றொரு பருவத்தை செயற்கையாகவே மரங்கள் மீது திணிக்கின்றனர். அதனால் மரங்கள் வலுவிழக்கும். தொடர்ந்து இதுபோல் பருவம் தவறி மரங்களை மகசூலுக்கு தயார்ப்படுத்துவதால் அழிந்து போக வாய்ப்புள்ளது. மாம்பழங்களை வியாபாரிகள், கார்பைடு கல்லை வைத்து பழுக்க வைப்பது, பழங்களைச் செயற்கையாக வண்ணமய மாக்கி செய்து கொடுப்பதால் பழங்களின் இயற்கையான தன்மை, சத்து இல்லாமல் போகிறது. இதை செய்யவே கூடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x