Last Updated : 18 Dec, 2016 10:05 AM

 

Published : 18 Dec 2016 10:05 AM
Last Updated : 18 Dec 2016 10:05 AM

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கழிவுநீரில் பயோ காஸ் உற்பத்தி: சேலம் ஆவின் நிறுவனத்தில் அறிமுகம்

சேலம் ஆவினில் சுற்றுச்சூழலை காக்கும் விதமாக ரூ.2 கோடி மதிப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பயோ காஸ் உற்பத்தி தொடங்கியுள்ளது.

சேலம் இரும்பாலை பால் பண்ணை ரோட்டில் 47 ஏக்கர் பரப்பளவில் ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழகத்தி லேயே சேலம் ஆவின் நிறுவனத் தில்தான் அதிகப்படியாக, நாள் தோறும் 4.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கிருந்து சென்னைக்கு தினமும் 2 லட்சம் லிட்டர் பால் அனுப்பி வைக்கப்படுகிறது. மீதியுள்ள பால் உள்ளூர் தேவைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பால் பவுடர், வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர்பாகு, டெட்ரா பால் பாக் கெட், மில்க் ஷேக் ஆகிய பொருட் கள் தயாரித்து, மாநிலம் முழுவ தும் விற்பனைக்கு அனுப்பி வைக் கப்படுகிறது.

மாசுபடாத நீராக மாற்றம்

ஆவினில் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும்போது, தினமும் 7 லட்சம் லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவு நீரானது நிலத்தடி நீர், மண் வளத்தை பாதித்து சுற்றுப்புற சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் என்பதால் சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவு நீரை சுத்தம் செய்து மாசுபடாத நீராக மாற்றி, வயல்களுக்கு பாய்ச்சப்படுகிறது.

இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நடவடிக்கையில் மீத்தேன் வாயு எனும் பயோ காஸ் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டம் வகுத்தது. இதன்படி, சேலம் ஆவினுக்கு ரூ.2 கோடி திட்ட மதிப்பில் பயோ காஸ் உற்பத்தி கூடம் செயல்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதன்படி, சேலம் ஆவினில் 2 ஏக்கர் பரப்பளவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும், பயோ காஸ் உற்பத்தி கூடமும் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது, சேலம் ஆவினில் சோதனை அடிப்படையில் பயோ காஸ் உற் பத்திக் கூடம் இயங்கி வருகிறது. இதன் மூலம் சுற்றுப்புறச் சூழலை காக்கும் விதமாகவும், எல்பிஜி எரிவாயு பயன்பாட்டுக்கு மாற்றாக பயோ காஸ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஆவின் கேன்டீனில் பயோ காஸ் பயன் படுத்தி, ஊழியர்களுக்கு உணவுப் பொருட்கள் தயாரித்து வருகின்றனர். அரசு நிறுவனமான ஆவினில் நாட்டில் முதல்முறையாக பயோ காஸ் உற்பத்தி அறிமுகம் செய் துள்ளதை அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து சேலம் ஆவின் பொது மேலாளர் சாந்தி கூறியதாவது:

இந்தியாவில் முதல்முதலாக தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பயோ காஸ் உற்பத்திக் கூடம் அமைக்கப்பட் டுள்ளது. இங்கு நாள்தோறும் 1,100 மெட்ரிக் மீட்டர் கியூப் பயோ காஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு பயோ காஸ் மூலமே சமையல் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் அளவுக்கு எல்பிஜி காஸ் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக பயோ காஸ் உற்பத்தி இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் அம்சமாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x