Published : 27 Dec 2022 05:40 PM
Last Updated : 27 Dec 2022 05:40 PM
சென்னை: தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வரும் டிச.30-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் கூறியது: "அனைத்து நியாய விலைக் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்கள், எந்தெந்த தேதிகளில் பொங்கல் தொகுப்புகளைப் பெற்றுக்கொள்வது என்று, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படவுள்ளது. அந்தப் பணிகளில் தற்போது கூட்டுறவுத் துறை ஈடுபட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க உத்தரவிட்டுள்ளார். அவற்றை எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் விநியோகம் செய்வதற்காகவும், தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அதை சிறப்பாக கொண்டுபோய் சேர்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜன.4-ம் தேதி வரை வழங்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT