Published : 27 Dec 2022 05:56 AM
Last Updated : 27 Dec 2022 05:56 AM
கிருஷ்ணகிரி/தருமபுரி: பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம், தேங்காய் வழங்க வலியுறுத்தி, கிருஷ்ணகிரி, சூளகிரியில் பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் சிவபிரகாசம், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோவிந்தராஜ், மீசை அர்ச்சுணன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ‘ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காய் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.
சூளகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட விவசாய அணித் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட தலைவர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி: இதுபோல, தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக-வின் தருமபுரி மாவட்ட விவசாய அணி தலைவர் வெற்றிவேல் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் பங்கேற்றார்.
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும். இதன்மூலம், கரும்பு, தேங்காய் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், வெல்லம் உற்பத்தியில் ஈடுபடும் ஆலை தரப்பினர் ஆகியோரின் வாழ்வாதாரம் மேம்படும், என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அழகு, குழந்தை, ரவி, மாவட்ட துணைத் தலைவர் சிவன், மாநில திட்ட பொறுப்பாளர் வெங்கடாசலம், மாவட்ட பொதுச் செயலாளர்கள், விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT