Published : 26 Dec 2022 12:01 PM
Last Updated : 26 Dec 2022 12:01 PM

"நெடிய பொதுவாழ்வுக்கு சொந்தக்காரர்" - இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாளை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று (டிச.26) தனது 98 வது பிறந்தநாளை எட்டியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"ஆங்கிலேய ஆட்சிக்காலம் தொடங்கி, மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்கப் போராடும் இன்றளவும் தொடரும் நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்; 'தகைசால் தமிழர்' தோழர் நல்லகண்ணுவிற்கு 98-வது பிறந்தநாள் வாழ்த்துகள்.

தொண்டுக்கு இலக்கணம்! தியாகத்தின் இலக்கியம்! கொள்கையின் மரு உரு! உழைப்பின் திரு உரு! அய்யா நல்லகண்ணு இன்றைய தமிழ்நாட்டின் ஈடு இணையில்லா வழிகாட்டி! நீடூழி வாழ்ந்து இந்த நாட்டுக்கு வழிகாட்ட வாழ்த்துகிறேன்!" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 1 Comments )
  • s
    sundarsvpr

    இதர அரசியல்வாதிகளிடம் இருந்து மாறுபட்ட குணங்கள் உடைய பொதுஉடைமை தலைவர் நல்லகண்ணு அவர்களின் தொண்டு மேலும் தொடர நீண்ட ஆயுளை பெற்று சிரஞ்சீவி போல் வாழ இறைவன் அருள் நிச்சியம் கிடைக்கும். இல்லை என்பதும் ஒருமதம் தான். இந்த மதத்திலிருந்து விடுபடவேண்டும். கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள் விடுபடமாட்டார்கள். நாஸ்தி என்பதில் நல்லகண்ணு திடமாய் உள்ளவர். இவரும் மதவாதிதான்.

 
x