Published : 16 Dec 2016 09:54 AM
Last Updated : 16 Dec 2016 09:54 AM
சோழிங்கநல்லூர் சதுப்பு நிலப் பகுதியில் புயலால் சேதம் அடைந்துள்ள உயர் அழுத்த மின்கோபுரங்களை மின்வாரிய ஊழியர்கள் படகுகள் மூலம் சென்று தங்கள் உயிரை பணயம் வைத்து சீரமைத்து வருகின்றனர்.
சென்னையில் கடந்த திங்க ளன்று வீசிய ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் மின்தடை ஏற் பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 450 மின்மாற்றிகள், 4 ஆயிரத்து 500 மின்பகிர்மானப் பெட்டிகள் சேதமடைந்துள்ளன. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 17 ஆயிரம் மின் கம்பங்களும், சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர் நிலை மின்கம்பிகளும் சேதம் அடைந்துள்ளன.
இவற்றை சரி செய்வதற்காக சென்னையில் 6 ஆயிரம் மின் ஊழியர்களும், பிற மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்து 500 மின் ஊழியர்களும், 70 அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணி கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், வெளி மாவட் டங்களில் இருந்து வரவழைக்கப் பட்டுள்ள மின்வாரிய ஊழியர் களுக்கு இப்பணி மிகவும் சவாலாக அமைந்துள்ளது.
குறிப்பாக, சோழிங்கநல்லூர் பகுதியில் சதுப்பு நிலம் உள்ளது. அதன் குறுக்கே உயர் அழுத்த மின்கோபுரங்கள் நிறுவப்பட்டுள் ளன. ‘வார்தா’ புயலினால் இந்த மின்கோபுரங்களில் உள்ள மின்சார ஓயர்கள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை சீர்செய்ய மின்வாரிய ஊழியர்கள் படகில் சென்று அவற்றை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழி யர்கள் கூறியதாவது:
இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது சேதம் அடையும் மின்சார கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை நாங்கள் சீரமைத்துள்ளோம். கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது கூட, ஏராளமான மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. ஆனால் அவற்றை எல்லாம் எளிதாக சீரமைத்தோம். ஆனால், இந்த முறை புயல் காரணமாக மின்கம்பங்கள் மட்டு மின்றி உயர் அழுத்த மின்கோபு ரங்களும் சேதம் அடைந்துள்ளன. பொதுவாக, சாதாரண நிலப் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கோபுரங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் ஏணியின் மூலம் மேலே ஏறி அவற்றை சரி செய்வோம்.
ஆனால், இங்கு சதுப்பு நிலத்தில் நிறுவப்பட்டுள்ள மின்கோபுரங் களை சரி செய்ய ஏணியைக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் மின்கோபுரத்தின் மீது ஏறிச் செல்ல வேண்டியள்ளது. உயிரை பணயம் வைத்து இப்பணியை மேற்கொள்வது எங்களுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. அத்துடன், இக்கோபுரத்தின் அருகில் செல் வதற்கே படகில்தான் செல்ல வேண்டியுள்ளது. இதேபோல், பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கோபுரங்களையும் நாங்கள் சீரமைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக பிற மாவட் டங்களில் இருந்து வரவழைக்கப் பட்டுள்ள மின்வாரிய ஊழியர்கள் தங்குவதற்கான வசதிகள் திருமண மண்டபங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களுக்கு 3 வேளை உணவு, தேநீர், ஸ்நாக்ஸ் ஆகிய வையும் வழங்கப்படுகிறது. ஷிப்ட் முறையில் பணிபுரியும் இவர்கள் பணி நேரத்தின் போது உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக வெளியே சென்றால் பணிகள் பாதிக்கும் என்பதற்காக அவர்களுக் குத் தேவையான அனைத்தையும் அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று வழங்கும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT