Published : 23 Dec 2022 12:10 PM
Last Updated : 23 Dec 2022 12:10 PM
சென்னை: தொல்லியல் நினைவுச் சின்னங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் குவாரி நடத்தக்கூடாது என்ற விதிமுறை தளர்த்திய அரசாணை திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா?
ஏற்கெனவே காப்புக்காடுகளின் (Reserved Forest) எல்லையிலிருந்தே குவாரி நடத்தலாம் என உத்தரவிட்ட அடுத்த சில நாட்களிலேயே தொல்லியல் நினைவுச் சின்னங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் குவாரி நடத்தக்கூடாது என்ற விதிமுறையை தற்போது தளர்த்தியிருக்கிறார்கள்.
கடும் கண்டனத்திற்குரிய இந்த அரசாணையை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அந்தத் துறையின் அமைச்சருக்கு பயந்து இப்படி அரசாணைகளை அடுத்தடுத்து பிறப்பிக்க முதல்வர் ஒப்புதல் அளிக்கிறாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா? ஸ்டாலின் விளக்கம் கொடுப்பாரா?" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
தி.மு.க அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 23, 2022
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT