Published : 23 Dec 2016 09:01 AM
Last Updated : 23 Dec 2016 09:01 AM
பெற்றோர்கள் இறந்த நிலையில் சிறுவனின் தந்தையை கண்டறிய சம்பந்தப்பட்ட சிறுவனுக்கும், தந்தை வழி பாட்டிக்கும் மரபணு சோதனை நடத்த உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மணப்பாறை தொப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். டீ கடை நடத்தி வந்தார். கடந்த 13.10.1997-ல் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை யில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது வேன் மோதி உயிரிழந்தார்.
இதையடுத்து ஆறுமுகத்தின் தாயார் நாகம்மாள், அவரது இரு சகோதரர்கள் ரூ.3 லட்சம் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் 1998-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆறுமுகத்தின் மனைவி ஜெய மணி, மைனர் மகன் பாலசுப் பிரமணியன் ஆகியோர் ரூ.5 லட்சம் இழப்பீடு கேட்டு 1999-ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்விரு வழக்குகளையும் விசாரித்து மொத்தமாக ரூ.4.70 லட்சம் இழப்பீடு வழங்கவும், அதில் ரூ.75 ஆயிரத்தை நாகம் மாளுக்கும், மீதிப்பணத்தை ஜெய மணியும், பாலசுப்பிரமணியனும் சமமாக பிரித்துக்கொள்ளவும் 28.11.2000-ம் ஆண்டில் மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நாகம்மாள், அவரது இரு மகன் கள் உயர் நீதிமன்ற கிளை யில் 2001-ம் ஆண்டில் மேல்முறை யீடு செய்தனர். அந்த மனுவில், பாலசுப்பிரமணியன் ஆறுமுகத் தின் மகன் அல்ல. அவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது தவறு எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப் பித்த உத்தரவு:
1997-ல் ஆறுமுகம், 2015-ல் ஜெயமணி ஆகியோர் இறந்துவிட் டனர். இந்த வழக்கு 18 ஆண்டு களாக நிலுவையில் உள்ளது. நாகம்மாளுக்கு 75 வயதாகிறது. இந்த வழக்கில் நாகம்மாள், சிறுவன் பாலசுப்பிரமணியன் இடையிலான உறவு முறையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இப்பிரச்சினையை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும்.
தாத்தா, பாட்டி மரபணு சோத னையில் குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்க முடியும் என வழக்கறிஞர் கே.என்.தம்பி தெரிவித்தார். மரபணு சோதனை நடத்தி நாகம்மாளும், பாலசுப்பிரமணியனும் பாட்டி, பேரன் என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.
மரபணு சோதனைக்கு இரு தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதனால் நாகம்மாள், பாலசுப்பிரமணியன் ஆகியோர் மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் முன்பு இன்று காலை நேரில் ஆஜராகி மரபணு சோதனைக்கான ரத்த மாதிரியை அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT