Published : 22 Dec 2022 12:57 PM
Last Updated : 22 Dec 2022 12:57 PM

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு: இடைநிலை பராமரிப்பு மையத்தை தொடங்கி வைத்தார்

மையத்தை தொடங்கி தொடங்கி வைத்தார் |

சென்னை: கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு கட்டப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை தொடங்கி வைத்தார்

225 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் ஆயிரக்கணக்கான புற மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்நிலையில் கீழ்பாக்கம் அரசுமனநல மருத்துவமனையில் ரூ.2.36கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.22) தொடங்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் 75 புதிய அவசர கால வாகனங்கள், மாணவர்களுக்கு "மனம்"திட்டம், அனைத்துஅரசு மருத்துவக் கல்லூரிகளிலும் "மனநல நல் ஆதரவு மன்றங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையத்தை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x