Published : 22 Dec 2022 06:25 AM
Last Updated : 22 Dec 2022 06:25 AM

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் இலக்கிய துறை தொடங்க ரூ.5 கோடி நிதி: துணைவேந்தரிடம் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ துறையை உருவாக்க ரூ.5 கோடி நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அதற்கான நூல் உரிமைத் தொகை, 38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது மற்றும் 9 பேருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித் துறையை உருவாக்க, ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் வழங்கினார்.

இதுதவிர, வாழும் தமிழறிஞர்களான நெல்லை செ.திவான், விடுதலை ராஜேந்திரன், நா.மம்மது ஆகியோரது நூல்கள் அரசால் நாட்டு உடைமையாக்கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.15 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.

அதேபோல, மறைந்த தமிழறிஞர் நெல்லை கண்ணன் நூல்களுக்கு ரூ.15 லட்சம், கந்தர்வன் என்ற நாகலிங்கம், சோமலே, ந.ராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகியோரது நூல்களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளையும் முதல்வர் வழங்கினார்.

கடந்த 2021-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது, அரியலூர் சி.சிவசிதம்பரம், ராணிப்பேட்டை கவிஞர் மா.சோதி, ராமநாதபுரம் புலவர் அ.மாயழகு, ஈரோடு முத்துரத்தினம், கடலூர் ஆ.நாகராசன், கரூர் கடவூர் மணிமாறன், கள்ளக்குறிச்சி இரா.துரைமுருகன், கன்னியாகுமரி புலவர் சு.கந்தசாமி பிள்ளை, காஞ்சிபுரம் இரா.எல்லப்பன், கிருஷ்ணகிரி ஆ.ரத்தினகுமார், கோவை மானூர் புகழேந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதுதவிர, சிவகங்கை வ.தேனப்பன், செங்கல்பட்டு எம்.கே.சுப்பிரமணியன், சென்னை வே.மாணிக்காத்தாள், சேலம் இரா.மோகன்குமார், தஞ்சாவூர் ஆறுமுக சீதாராமன், தருமபுரி கவிஞர் கண்ணிமை, திண்டுக்கல் துரை.தில்லான், திருச்சி க.பட்டாபிராமன், திருநெல்வேலி வ.பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர் தெய்வ.சுமதி, திருப்பூர் அ.லோகநாதன், திருவண்ணாமலை க.பரமசிவன், திருவள்ளூர் செ.கு.சண்முகம், திருவாரூர் ரெ.சண்முக வடிவேல், தூத்துக்குடி கவிஞர் அ.கணேசன், தென்காசி ஆ.சிவராமகிருஷ்ணன், தேனி சீருடையான் ஆகியோருக்கும் முதல்வர் விருது வழங்கினார்.

மேலும், நாகை மு.சொக்கப்பன், நாமக்கல் சி.கைலாசம், நீலகிரி போ.மணிவண்ணன், புதுக்கோட்டை வீ.கே.கஸ்தூரிநாதன், பெரம்பலூர் செ.வினோதினி, நெல்லை ந.சொக்கலிங்கம், மயிலாடுதுறை ச.பவுல்ராஜ், விருதுநகர் அ.சுப்பிரமணியன், விழுப்புரம் ப.வேட்டவராயன், வேலூர் ம.நாராயணன் ஆகிய 38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, முதல்வர் பொன்னாடை அணிவித்தார்.

இதேபோல, செ.சுகுமாரன், செ.ராஜேஸ்வரி, மு.வளர்மதி, ராக.விவேகானந்த கோபால், அ.சு.இளங்கோவன். வீ.சந்திரன், ரா.ஜமுனா கிருஷ்ணராஜ், தமிழ்ச்செல்வி, ந.தாஸ், மா.சம்பத்குமார் ஆகியோருக்கு 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, ரூ.2 லட்சம் காசோலை, தகுதியுரை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் இரா.செல்வராஜ், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x