Published : 17 Dec 2016 10:18 AM
Last Updated : 17 Dec 2016 10:18 AM
பண மதிப்பு நீக்கம், ஜெயலலிதா மரணம், ‘வார்தா’ புயல் ஆகிய 3 அடுத்தடுத்த நிகழ்வுகளால் கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு மற்றும் தனியார் கட்டுமானத் திட்டப் பணி கள் ஸ்தம்பித்துள்ளன.
தமிழகத்தில் கட்டுமானத் தொழில் ஏற்கெனவே நெருக்கடி யைச் சந்தித்து வருகிறது. இந் நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்ற அறிவிப்பால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அன்றாடம் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
50,000 வடமாநிலத் தொழிலாளர்
தொழிலாளர்கள், சம்பளமாக பெற்ற பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கியில் வரிசை யில் நீண்டநேரம் நின்றதால் வேலைக்கும் போக முடியவில்லை. எனவே, தங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வேண்டாம். 100 ரூபாய் நோட்டுதான் வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரினர். சம்பளத்தை 100 ரூபாய் நோட்டு களாக ஒப்பந்ததாரரால் கொடுக்க முடியவில்லை. வேறு வழியில்லா மல் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வேலைசெய்த சுமார் 50 ஆயிரம் வடமாநிலத் தொழி லாளர்கள் சொந்த ஊர்களுக்கே திரும்பிவிட்டனர்.
கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா காலமானதால் 4 நாட் கள் வரை கட்டுமானப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதைத் தொடர்ந்து ‘வார்தா’ புயல் தாக்கி யதால் கட்டுமானப் பணிகள் இன்ன மும் தொடங்கப்படவில்லை.
வங்கிக் கணக்கு தொடக்கம்
இதுகுறித்து இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்ட மைப்பு (கிரெடாய்) சென்னை மண்டலத் தலைவர் சுரேஷ் கிருஷ் ணன் கூறும்போது, “தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில்தான் கட்டுமானப் பணிகள் ஏராளமாக நடக்கின்றன. அண்மையில் நடந்த அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி திட்டச் செலவிலான அரசு மற்றும் தனியார் கட்டுமானத் திட்டப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. ரூபாய் நோட்டு பிரச்சினை காரணமாக கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தைக் குறைக்க அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி உதவுகிறோம்” என்றார்.
கிரெடாய் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் தலைவர் என்.நந்தகுமார் கூறியபோது, “ரூபாய் நோட்டு பிரச்சினையால் வீடு வாங்குவதை மக்கள் தள்ளிப் போட்டுள்ளனர். இது கட்டுமானத் தொழிலில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் 25 ஆயிரம் வீடுகள் விற்கா மல் இருக்கின்றன. அடுத்த 3 மாதங் களில் கட்டி முடிக்கப்படவுள்ள சுமார் 40 ஆயிரம் வீடுகளும் விற்கா மல் உள்ளன. தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு குறைந்ததே இதற்கு காரணம். இந்நிலையில் தமிழகத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் கட்டு மானத் தொழில் கடும் நெருக் கடியைச் சந்தித்துள்ளது” என்றார்.
வீடு, பொருட்கள் இழப்பு
கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய முன்னாள் தலைவ ரும், தமிழ்நாடு விவசாய தொழி லாளர்கள் கட்சித் தலைவருமான பொன்குமார் கூறும்போது, “3 நிகழ்வுகளும் கட்டுமானத் தொழி லாளர்களைப் பாதித்துள்ளன. அதிலும் வார்தா புயல் அவர் களை முற்றிலுமாக முடக்கிவிட் டது.
வண்டலூர், மேடவாக்கம், பெருங்களத்தூர், எண்ணூர், ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர், மாதவரம் போன்ற பகுதிகளில் குடிசைகளில் வசித்த கட்டுமானத் தொழிலாளர்கள் புயல் தாக்கு தலால் வீடு, பொருட்களை இழந்து நிர்க்கதியாக இருக்கின்றனர்.
இவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க 15 நாட்கள் ஆகும். அதுவரை அவர்களுக்கு உணவு, மாற்று உடை, வீடு கட்டுவதற்கான பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்க அரசு போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT