Published : 21 Dec 2022 12:29 PM
Last Updated : 21 Dec 2022 12:29 PM
சென்னை: சென்னையில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் அதிமுகவின் 75 மாவட்டங்கள் மற்றும் இதர அணிகளில் தனது ஆதரவு நிர்வாகிகளை நியமித்தார். குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளையும் நியமித்தார். மேலும் கட்சியின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று (டிச.21) சென்னையில் நடைபெறும் என்று அறிவித்தார்.
இதன்படி கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் இன்று (டிச.21) காலை முதல் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில், 88 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் எடுக்கப்படும் பல முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்புகளை கூட்ட முடிவில் ஓபிஎஸ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT