Published : 21 Dec 2022 11:31 AM
Last Updated : 21 Dec 2022 11:31 AM
சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் ஒரு கோடியாவது பயனாளிக்கு தமிழ்நாடு மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இன்று (டிச.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, துணை இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேவையான அளவிற்கு பரிசோதனை மையங்கள் உள்ளன. சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT