Published : 07 Dec 2016 08:19 AM
Last Updated : 07 Dec 2016 08:19 AM
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்துக்காக வேலூர் வரும்போதெல்லாம் சந்தித்து பேசும் ஒரு முக்கிய நபராக இருப்பவர் வேலூரைச் சேர்ந்த முனியம்மாள். தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கிளம்பும் நேரத்தில் முக்கிய நிர்வாகிகளை வழக்கமாக சந்தித்துப் பேசும் ஜெயலலிதா, முனியம்மாவை மட்டும் தனியாக அழைத்து ஒருசில வார்த்தைகளை பேசிவிட்டுச் செல்வார்.
அம்மாவுக்காக மட்டுமே..
இதுகுறித்து, முனியம்மாள் கூறும்போது, ‘‘1972-ல் இருந்து கட்சியில் இருக்கிறேன். அம்மாவுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். வேலூரில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த சுப்பிரமணிய சுவாமியைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு கட்டளை வந்தது. என் தலைமையில் 7 ஆயிரம் பெண்களைத் திரட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக போராட்டம் நடத்தியதை அம்மா வெகுவாகப் பாராட்டினார். பதவிக்காக நான் எதையும் செய்ததில்லை. அம்மாவுக்காக மட்டுமே செய்தேன். பிரதிபலன் எதையும் எதிர்பார்க்கவில்லை. அம்மா வேலூர் வரும்போதெல்லாம் ‘உனக்கு என்ன வேண்டும் முனியம்மா’ என கேட்பார். ‘அம்மா.... முதலமைச்சராக இருந்தாலே போதும்’ என கூறுவேன். அவர் சிரித்துக்கொண்டே செல்லும் காட்சி என் கண்ணிலேயே இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT