Published : 02 Dec 2016 10:02 AM
Last Updated : 02 Dec 2016 10:02 AM
கால்நடைகளுக்கு பசுந்தீவனமாக பயன்படும் அசோலா நீலப்பச்சை பாசியை உற்பத்தி செய்வது குறித்து, 2 லட்சத்துக்கும் மேற்பட் டோருக்குப் பயிற்சி அளித்து, ஓசையின்றி தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது கன்னியாகுமரியைச் சேர்ந்த இயற்கை வள அபிவிருத்தி மையம்.
கால்நடைகளுக்கான பசுந் தீவனங்களுக்குப் பெரும் தட்டுப் பாடு நிலவுவதால், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் களும், அவற்றை வளர்க்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை பங் களிப்புடன், இயற்கைவள அபிவிருத்தித் திட்டத்தில், கன்னி யாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில், பசுந்தீவன உற்பத்தி பயிற்சி இலவசமாக அளிக்கப் படுகிறது. உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் இருந்து கால்நடை வளர்ப்போரை வரவழைத்தும், கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்களுக்கும் இப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கால்நடைகளுக்குப் பசுந்தீவன மாக பயன்படுவது அசோலா எனப்படும் நீலப்பச்சை பாசி. வீட்டில் உள்ள சிறிதளவு இடம் அல்லது மாடியில் எளிய முறையில் அசோலாவை வளர்க்கலாம். இதை உற்பத்தி செய்ய கிலோவுக்கு ரூ.1 மட்டுமே செலவாகிறது என்பது ஆச் சரியம். இந்த பசுந்தீவனம் குறித்து, ‘தி இந்து’விடம், இயற்கை வள அபிவிருத்தித் திட்ட பயிற்சியாளர் எஸ்.பிரேமலதா கூறியதாவது:
உலக அளவில் அசோலா நீலப் பச்சை பாசியை பயிர்களுக்கு உர மாக உற்பத்தி செய்வதற்கான முயற்சி கடந்த 2000-ல், கன்னியா குமரி விவேகானந்தா கேந்திராவில் தொடங்கப்பட்டது. இதன் பிறகே கால்நடைத் தீவனமாகவும் இதை அங்கீகரித்தனர். தொடக்கத் தில் கேலியாக பார்த்த நிலையில், 2004-ம் ஆண்டில் இருந்துதான் முறையாக பயிற்சி பெறுவதற்கு கால்நடை வளர்ப்போர் முன்வந் தனர். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய தொண்டு நிறுவனத்தினர் கன்னி யாகுமரிக்கு சுற்றுலா வந்தபோது, விவேகானந்தா கேந்திரா வளாகத் தில் உள்ள இயற்கை வள அபிவிருத்தி பயிற்சி மையத்தைப் பார்வையிட்டு, அசோலா தயாரிப்பில் ஆர்வம் காட்டினர். இதன் விளைவாக 10 பேர் அடங்கிய குழு முதலில் பயிற்சி பெற்றனர்.
இதைக் கற்ற ஒவ்வொரு குழுவினரும் 1,000 பேருக்கு மேல் பயிற்சி வழங்கினர். இதனால், கேரள மாநிலத்தில் மட்டும் 1 லட்சம் பேருக்கு மேல் அசோலா தயார் செய்யும் பயிற்சியை முடித்து, சான்றிதழ் பெற்றுள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளிக் கப்பட்டுள்ளது.
பசு மாடுகளுக்கு 1 கிலோ பிண்ணாக்கு தரும் சக்தியை, 2 கிலோ அசோலா வழங்குகிறது. ஆனால், இதன் உற்பத்தி செலவு வெறும் 2 ரூபாய் மட்டுமே. கோழிகளுக்கு அசோலாவை அப் படியே போட்டால் தின்றுவிடும். இதனால் கோழிகள் கனத்த தோடுடன் கூடிய முட்டைகளை அதிக நாட்கள் இடும். ஆடு, மாடுகளுக்கு தவிடு அல்லது பிண்ணாக்கில் கலந்து இடவேண்டும். 2 கிலோ அசோலா அரை லிட்டர் பாலை சுரக்கச் செய்கிறது. அதிக புரோட் டீன், ஹார்போஹைட்ரேட், மினரல், வைட்டமின் என பல சத்துகள் இதில் நிறைந்துள்ளன.
வெறும் 4 சதுர மீட்டர் கொண்ட குறைந்த பரப்பளவு இருந்தாலே அசோலாவை உற் பத்தி செய்யலாம். சிறிதளவு பசுஞ்சாணம் மட்டுமே முதலீடு. அசோலா பயிற்சியால் கால்நடை வளர்ப்பு அதிகரித்ததை ஆய்வு செய்த இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், கன்னியாகுமரி இயற்கைவள அபிவிருத்தி மையத் துக்கு விருது வழங்கியதுடன், கால்நடைத் துறைக்கான அசோலா தயாரிப்பு பயிற்சிக்கும் தேர்வு செய்துள்ளனர்.
மேலும், தேசிய ஆராய்ச்சி அபிவிருத்தி கழகம் 2006, 2010-ம் ஆண்டுகளில் சிறந்த அசோலா தயாரிப்பு பயிற்சி மையத்துக்கான விருதை வழங்கியுள்ளது. இப் பயிற்சி வளர்ச்சியடைந்ததற்கு கேரள வேளாண் விஞ்ஞானி கம லாசனனின் முயற்சி முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT