Published : 19 Dec 2022 01:24 PM
Last Updated : 19 Dec 2022 01:24 PM
சென்னை: முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (டிச.19) தொடங்கிவைத்தார்.
முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ என்ற திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி ஆகியவற்றின் மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (டிச.19) தொடங்கிவைத்தார். மேலும், இதற்கான இலட்சினையை அறிமுகம் செய்து வைத்து, இணையதளத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், எந்தப் பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை நிதி வழங்கியவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT