Published : 17 Dec 2022 06:59 AM
Last Updated : 17 Dec 2022 06:59 AM
சென்னை: விஸ்வாஸ் அறக்கட்டளை சார்பில் சென்னையில் மார்கழி மஹாசப்தாகம் இன்று முதல் டிச. 23-ம்தேதி வரை நடைபெறுகிறது
சென்னை அயனாவரம் பகுதியில் விஸ்வ விஷ்ணு சஹஸ்ரநாம சமஸ்தான் (விஸ்வாஸ்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் உலகின் அனைத்துபகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
அந்தவகையில் உலகம் முழுவதும் 3 நிலைகளில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தை இந்நிறுவனம் மாதம்தோறும் பல்வேறு குழுக்களுக்கு, கற்பிக்கிறது. சரியானஉச்சரிப்பு, அனைத்து நாமங்களின் அர்த்தம், அனைத்து நாமங்களின் ஆராய்ச்சி நோக்கு என 3 பிரிவுகளாக பயிலும் நிலை அமைந்துள்ளது.
’மழலையின் மொழியில் மாதவனின் நாமங்கள்’ என்ற குழந்தைகளுக்கான விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 350 பள்ளிகளைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவரும் இந்நிறுவனம், சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி கல்யாண மண்டபத்தில் டிச 17 (இன்று) முதல் 23-ம் தேதி வரை 7 நாட்கள் ‘சப்தாகம்’ கொண்டாட உள்ளது.
தினமும் காலை 4 முதல் 8 மணி வரை சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 27 ஆவர்த்தி விஷ்ணுசஹஸ்ரநாம பாராயணம் (கூட்டுபிரார்த்தனை), விளக்க உரைகள்.
நாம சங்கீர்த்தனங்கள் நடைபெறும். சப்தாகத்தின் நிறைவு நாளில் நிவாச கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு www.visvasvsn.org என்ற இணையதளத்திலும், 9790925804 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT