Published : 07 Dec 2016 08:21 AM
Last Updated : 07 Dec 2016 08:21 AM

ஸ்ரீரங்கம் மண், பெரிய பெருமாள் மீது தீராத பக்தி கொண்டவர் ஜெயலலிதா

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகரும், ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வரும் போதெல்லாம் அவருக்கு பூர்ண கும்ப மரியாதை அளித்து, கோயிலில் சேவை செய்ய உதவி வந்தவருமான சுந்தர் பட்டர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான அனுபவங்கள் குறித்து, ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தீவிர பக்தர் ஜெயலலிதா. அவர் எந்த பெருமாளை வழிபட்டாலும், ஸ்ரீரங் கம் பெருமாள் மீது அவருக்கு அளவுகடந்த பக்தி. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஜெய லலிதா ஒரு முறை ஸ்ரீரங்கம் கோயி லுக்கு வந்தார். ஸ்ரீரங்கம் தொகு தியில் நீங்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி, தமிழக முதல்வராக வேண்டுமென பெருமாள் மூலஸ் தானத்தில் வைத்து நான் சொன் னேன்.

அப்போது, எதுவாக இருந்தாலும் படுத்திருக்கும் பெருமாள்தான் முடிவு செய்வார், பிரார்த்தனை செய்துகொள் என மிகுந்த பக்தி யோடு அவர் பதிலளித்தார்.

வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டுச் சென்றார். ஸ்ரீரங்கம் பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டு மூலஸ்தானத்தில் ஏறத் தாழ 40 நிமிடங்கள் நின்றுகொண்டே பெருமாளைச் சேவிப்பார். அவரது கையில் பூக்களைக் கொடுத்து, பாசுரங்களை நான் சொல்லச் சொல்ல மீண்டும் அதை திரும்பச் சொல்லி, கண்களில் நீர் தளும்ப வழிபடுவார். நான் வேகமாகப் பாசுரங்களைச் சொன்னால், மெது வாகச் சொல்லுங்கள் என்று சொல்லி அதை திரும்பச் சொல்லுவார்.

எதுவாக இருந்தாலும், பெரிய பெருமாள்தான் என அசைக்க முடியாத நம்பிக்கையை பெருமாள் மீது கொண்டிருந்தவர் ஜெயலலிதா.

முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் மூன்றுக்கு மேற்பட்ட முறை கோயிலுக்கு வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் அவருக்கு பெருமாள் மற்றும் தாயாரைச் சேவிக்க வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தால், அனைத்துப் பகுதிகளையும் பார்த்துக்கொண்டே, இதை செய் யுங்கள், நன்றாக செய்யுங்கள் என சொல்லிக்கொண்டே வருவார்.

தனது மூதாதையர் பிறந்த ஸ்ரீரங்கம் மண்ணின் மீது ஜெய லலிதாவுக்கு மிகுந்த மரியாதையும், பாசமும் உண்டு. ஸ்ரீரங்கத்தின் மீது மாறாத காதல் கொண்டிருந்தார் என்றுகூட சொல்லலாம். பெரிய பெருமாள் மீதும், ஸ்ரீரங்கத்தின் மீதும் அவருக்கு அளவுகடந்த பக்தி. பெரிய பெருமாளைச் சேவிக்கும் போது நட்போடு சேவிப்பார். ஸ்ரீரங்கத் துக்கு மக்கள் கேட்காத அனைத்தை யும் செய்துள்ளார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x