Published : 15 Dec 2022 06:08 AM
Last Updated : 15 Dec 2022 06:08 AM

மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி: டிச.16, 17-ல் குடிநீர் விநியோகம் பாதிக்கும்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் மீஞ்சூரில் இயங்கி வருகிறது. இதில் 16-ம் தேதி காலை 8முதல் 18-ம் தேதி காலை 8 மணிவரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அதனால், இந்நிலையத்தில்குடிநீர் விநியோகம் இரு நாட்களுக்கு நிறுத்தப்படும். மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல்சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்துகுடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 8144930901 என்ற எண்ணையும், மணலி பகுதியை சேர்ந்தவர்கள் 8144930902 என்ற எண்ணையும், மாதவரம் பகுதியை சேர்ந்தவர்கள் 8144930903 என்றஎண்ணையும், பட்டேல்நகர், வியாசர்பாடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 8144930904 என்றஎண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் வாரியத்தின் தலைமை அலுவலக புகார் பிரிவின் 044-4567 4567 என்ற எண்ணையும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x