Published : 15 Dec 2022 06:50 AM
Last Updated : 15 Dec 2022 06:50 AM
சென்னை: தமிழகத்தில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 160-க்கும் மேற்பட்ட வாகனங்களும், 15 இருசக்கர அவசர உதவி வாகனங்களும் உள்ளன. அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு தினமும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன.
இந்நிலையில், 50 அவசர அழைப்பு உதவியாளர் (ERO), 10 மருத்துவ ஆலோசனை அதிகாரி (HAO) பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் டிசம்பர் 15-ம் தேதி (இன்று) முதல் 17-ம்தேதி வரை வரை நடைபெறுகிறது.
இஆர்ஓ பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.11,360 (பி.எஃப், காப்பீடு இதர படிகள் தனி) மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹெச்ஏஓ பணிக்கு பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம் படிப்பை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.14,000 (பி.எஃப், காப்பீடு இதர படிகள் தனி) மாத ஊதியமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 7550052551 / 73977 24714 / 98403 65462 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT