Published : 27 Dec 2016 09:57 AM
Last Updated : 27 Dec 2016 09:57 AM
பணமதிப்பு நீக்கம் காரணமாக விற்பனையில் மந்தம் ஏற்பட்டு தமிழகத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள காலண்டர்கள், டைரிகள் தேக்கமடைந்துள்ளன.
தமிழகத்தில் தீபாவளிக்கு பிறகு காலண்டர், டைரிகள் விற்பனை தொடங்கிவிடும். டிசம்பர் மாதத்தில் விற்பனை சூடுபிடிக்கும். ஆனால், “பணமதிப்பு நீக்க அறிவிப்பால் காலண்டர், டைரி விற்பனை பாதி யாகக் குறைந்துவிட்டது” என்கின் றனர் சென்னை பாரிமுனை பந்தர் தெரு மொத்த வியாபாரிகள்.
புத்தாண்டு பிறக்கும்போது வீட் டுக்கு ஒரு காலண்டர் கண்டிப்பாக வாங்குவார்கள். அனைவரது வீடு களிலும் குறைந்தபட்சம் ஒரு காலண்டராவது இருக்கும். டைரி யைப் பொறுத்தவரை தனிப்பட்ட உபயோகத்துக்கு வாங்குவோரை விட பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்க வாங்குவதே அதிகம். கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆயிரக் கணக்கான டைரிகள் வாங்கி தங் கள் ஊழியர்களுக்கு இலவசமாக வழங்குவார்கள். பணமதிப்பு நீக் கம் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதே பெரும் சிரமமாக இருப்பதால் பல கார்ப்ப ரேட் நிறுவனங்கள் இந்தாண்டு டைரிகளை வாங்கவில்லை என்று கூறப் படுகிறது.
பாதியாக குறைந்துவிட்டது
இதுபோல, சில வங்கிகள் டைரி களை மொத்தமாக வாங்கி அதன் முக்கிய வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கு வதுண்டு. சென்னையில் மட்டும் ஒவ்வொரு வங்கியும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் டைரிகள் வரை வாங்குவார்கள். இந்தாண்டு சில வங்கிகள் டைரிகளை வாங்க வில்லை என்றும், சில வங்கிகள் வழக்கமாக வாங்கும் டைரிகள் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்துவிட்டன என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“பணமதிப்பு நீக்கம் காரணமாக தற்போது முக்கால் பங்கு பணப் புழக்கம் தடைபட்டுள்ளது. பணத் தட்டுப்பாட்டால் அத்தியாவசிய செலவுக்கு மட்டுமே மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதனால் காலண்டர், டைரி விற் பனை பாதியாகக் குறைந்துவிட்டது. பட்டாசுகளோ, அலங்காரப் பொருட் களோ தேங்கினால் சில ஆண்டுகள் வரை இருப்பு வைத்து விற்க முடியும். ஆனால், காலண்டர், டைரியை புத்தாண்டுக்கு முன்னரோ அல்லது தைப் பொங்கலுக்குள்ளாகவோ விற்காவிட்டால் எடைக்குத்தான் போட வேண்டிய நிலை ஏற்படும்” என்று வேதனை தெரிவிக்கின்றனர் பாரிமுனை ஆண்டர்சன் தெரு வியாபாரிகள்.
கடந்தாண்டு முதல்முறையாக சீனாவில் இருந்து காலண்டர், டைரிகள் இறக்குமதி செய்யப் பட்டன. பணத் தட்டுப்பாட்டால் இந்தாண்டு இறக்குமதி செய்யப் படவில்லை. தற்போது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தமிழ் காலண்டர், ஆங்கில காலண்டர், முஸ்லிம்களுக்கான காலண்டர், குஜராத்திகளுக்கான காலண்டர் என தனித்தனியாக விற்கப்படுகிறது. ஒரு காலண்டர் ரூ.25 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா காலமானதால் அவரது புகைப்படம் இடம்பெற்றுள்ள காலண்டர் விற்பனை பாதியாகக் குறைந்துவிட்டதாம். திமுக தலைவர் கருணாநிதி படம் அச்சிடப்பட்ட காலண்டர் விற்பனையும் கடந் தாண்டு போல இல்லையாம்.
இது தொடர்பாக மெட்ராஸ் பேப்பர் அண்ட் போர்டு மெர்ச்சன்ட் வெல்பர் அசோசியேஷன் உறுப் பினர் ஷேக் அப்துல்லா கூறும் போது, “டெல்லி, கொல்கத்தா, சிவகாசியில் இருந்து காலண்டர், டைரிகளை கொள்முதல் செய்கி றோம். ஆண்டுதோறும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரூ.10 கோடி மதிப்புள்ள காலண்டர்கள், டைரிகள் விற்பனையாகும். இந்தாண்டு பண மதிப்பு நீக்கம் காரணமாக விற்பனை பாதியாகக் குறைந்துவிட்டது. இதனால் ரூ.5 கோடி மதிப்புள்ள காலண்டர்கள், டைரிகள் தேங்கியுள்ளன. தைப் பொங்கல் வரைதான் காலண்டர், டைரிகள் விற்பனையாகும். அப்படியே விற்றாலும் ரூ.1 கோடி மதிப்புள்ளவைதான் விற்கும். மீதம் ரூ.4 கோடி வரை நஷ்டம் ஏற்படும். விற்காத டைரிகளை எடைக்குத்தான் போட வேண்டிவரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT