Published : 14 Dec 2022 07:02 PM
Last Updated : 14 Dec 2022 07:02 PM
சென்னை: தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் விவரப் பட்டியல் வரிசையில் உதயநிதி ஸ்டாலினின் பெயர் 10-வது இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.14) தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, பதவிப் பிரமாணமும் ரகசியக்காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு துறை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் அதிகாரபூர்வ வலைதளமான www.tn.gov.in/ministerslist-ல் உதயநிதி ஸ்டாலின் பெயர் 10-வது இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி முதல்வர் ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரகுபதி, முத்துச்சாமி, பெரிய கருப்பன், தா.மே.அன்பரசன்,சாமி நாதன், கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், ராமசந்திரன், சக்கரபாணி, செந்தில்பாலாஜி, காந்தி, மா.சுப்பிரமணியன், மூர்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கர், சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன், நாசர், மஸ்தான், அன்பில் மகேஸ் பெய்யாமொழி, மெய்யநாதன், கணேசன், மனோ தங்கராஜ், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT