Published : 14 Dec 2022 01:56 PM
Last Updated : 14 Dec 2022 01:56 PM

6666 எண் கொண்ட வாகனம், நேரம் பார்த்த அமைச்சர் உதயநிதி... - பதவியேற்பு நாளில் கவனம் ஈர்த்தவை

சென்னை: தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு குடும்பத்தினர் அனைவரும் அவரை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தது முதல் கருணாநிதி நினைவிடத்தில் "உதயத்தை வரவேற்போம்" என்று வாசகம் எழுதப்பட்டு இருந்தது வரை பல விஷயங்கள் கவனம் ஈர்த்தன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், உதயநிதியின் பதவியேற்பு நிகழ்வையொட்டி கவனம் ஈர்த்தவை:

  • தமிழக அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பாக தாய், தந்தையிடன் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.
  • பதவியேற்பு மேடைக்கு செல்வதற்கு முன்பாக, குடும்பத்தினர் அனைவரும் உதயநிதி ஸ்டாலினை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
  • பதவியேற்றுக்கொண்ட பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.
  • குழுப் புகைப்படத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு இருக்கை அளிக்கப்பட்டு இருந்தது.
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு TN04 G6666 என்ற எண் கொண்ட அரசு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
  • ஆளுநர் மாளிகைளில் இருந்து தலைமைச் செயலகம் வந்த உதயநிதியை அமைச்சர் துரைமுருகன் அமைச்சர் இருக்கையில் அமர வைத்தார்.
  • கடிகாரத்தில் நேரம் பார்த்த பிறகு தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின்.
  • அமைச்சர் பொறுப்பேற்ற பின்பு முதல்வர் அறைக்கு சென்று முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். அப்போது மூத்த அமைச்சர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.
  • பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
  • கருணாநிதி நினைவிடத்தில் "உதயத்தை வரவேற்போம்" என்று வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x