Published : 10 Dec 2016 09:47 AM
Last Updated : 10 Dec 2016 09:47 AM
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னைக்கு அடுத்தபடியாக வெளியே தங்கி யது நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில்தான். பல முறை ஓய்வுக்காக கோடநாடு வந்தவர், சில நேரங்களில் கோடநாட்டில் இருந்து அலுவல்களை கவனித் துள்ளார். இதனால் கோடநாடு ‘கேம்ப் ஆபீஸ்’ என்றே அழைக் கப்பட்டது. இந்நிலையில், ஜெய லலிதாவின் மறைவை கோடநாடு எஸ்டேட் தொழிலாளர்களால் ஜீர ணித்துக்கொள்ள முடியவில்லை.
கோடநாடு எஸ்டேட்டுக்கு கோடநாடு, கெரடாமட்டம், சுண்டட்டி, ஈளாடா, கஸ்தூரிபா நகர், ஓம் நகர், எஸ்.கைக்காட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிக்காகச் செல்கின்றனர்.
அம்மா வந்த பின்னர்தான் எங்க ளுக்கு வாழ்வாதாரமே கிடைத்தது என்கிறார் கெரடாமட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி. அவர் கூறும் போது, ‘‘அம்மா எஸ்டேட் வாங்கி யதற்கு அப்புறம்தான் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் வேலை கிடைத்தது. 2,000 பேர் வேலை செய்கிறோம். அம்மா எஸ்டேட் வாங்கியதற்கு அப்புறம் தான் கோடநாடுக்கு அடையாளம் கிடைத்தது. அவங்க வந்தால் கோடநாடே திருவிழா கோலமாகி விடும்’’ என்றார்.
கன்னடத்தில் பேசுவார்
இந்த எஸ்டேட்டில் தங்கி வேலை செய்யும் ஜெயலட்சுமி(50) கூறும்போது, ‘‘எனது பூர்வீகம் கர்நாடகா. என் கணவர், என்னை பிரிந்து சென்றுவிட்டார். நான் கோடநாடு எஸ்டேட்டுக்கு 20 வரு டத்துக்கு முன்பு வந்தேன். 20 வரு டமாக இங்கேயே வேலை செய்கிறேன். அம்மா கோடநாடு வந்தால் கண்டிப்பாக, எங்களை சந்திப்பார். என்னைப்போல் கர்நாடகாவில் இருந்து வந்தவர் களிடம் கன்னடத்தில் பேசு வார். அன்பாக நலம் விசாரிப்பார். எங்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் செய்து கொடுத்திருக்கிறார். அவங்க இல்லாததை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை’’ என்றார்.
எஸ்டேட்டில் கடந்த 6 ஆண்டு களாக வேலை செய்யும் சரஸ்வதி கூறும்போது, ‘‘அவர் முதல்வராக இருந்தாலும், எங்களுக்கு அவங்க தங்கமான முதலாளி. எங்க ளுடைய எல்லா கோரிக்கை களையும் நிறைவேற்றுவார். இங்கு வந்தால், பேட்டரி காரில் எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பார். வேலை செய்துகொண்டு இருக்கும் எங்களிடம் நலம் விசாரிப்பார்.
எல்லோரையும் சரிசமமாகத் தான் கருதுவார். வீட்டை, குழந்தை களை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அட் வைஸ் சொல்லுவார். 5 வருடத் துக்கு முன் அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என கூறினோம். சரின்னு சொன்னாங்க.
விருந்து கொடுப்பார்
அப்புறம் அடுத்த வருடம் எல்லா தொழிலாளர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்தாங்க. அந்த போட்டோவை பிரேம் போட்டு எல்லோருக்கும் கொடுத்தாங்க. கெரடாமட்டத்துல உள்ள எல்லா வீடுகளிலும் அந்த குரூப் போட்டோ இருக்கும். அவர் கோடநாடு வந்தா நாங்கதான் முதலில் வரவேற்போம். அவர் இங்கிருந்து கிளம்புவதற்கு முன், எல்லா தொழிலாளர்களுக்கும் விருந்து கொடுப்பார்’’ என்றார்.
கோடநாடு எஸ்டேட் தொழி லாளர் எதிர்வரும் நிர்வாகத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT