Published : 13 Dec 2022 07:20 AM
Last Updated : 13 Dec 2022 07:20 AM

15 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் டிச.21-க்கு தள்ளிவைப்பு

சென்னை: திமுக அரசுக்கு எதிராக அதிமுக அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம், மழை காரணமாக 15 மாவட்டங்களில் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளநகராட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில்டிச.13-ம் தேதி (இன்று) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

தொடரும் கனமழை: இந்நிலையில், சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதாக தகவல் வந்துள்ளது. எனவே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர்,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்தஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, வரும் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

எனினும், இதர மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவித்தவாறு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வரும் 14-ம் தேதியும், ஏற்கெனவே தள்ளிவைக்கப்பட்ட பேரூராட்சி அளவிலான ஆர்ப்பாட்டம் வரும் 16-ம் தேதியும் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x