Published : 16 Dec 2016 11:46 AM
Last Updated : 16 Dec 2016 11:46 AM

மதுரை ரிங் ரோடு தற்காலிகமாக சீரமைப்பு: ஜெயலலிதா அறிவித்த ரூ.200 கோடி திட்டம் செயல்படுத்தப்படுமா?

‘தி இந்து’ செய்தி எதிரொலியாக மதுரை ‘ரிங்’ ரோடு பள்ளங்கள், சிதலமடைந்த தார் சாலைகள் ஒரே நாளில் சரி செய்யப்பட்டது. இந்த ‘ரிங்’ ரோட்டில் உள்ள மதுரை விமான நிலையம் சர்வதேச சரக்கு விமான நிலையமாக விரைவில் செயல்படவுள்ளதால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ரூ.200 கோடி திட்டத்தில் புதிய நான்கு வழிச் சாலையை அமைக்க தொழில் முனைவோர்கள், பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட ங்களுக்கு மதுரை ‘ரிங்’ ரோடு தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாக இருக்கிறது. திருநெ ல்வேலி, கன்னியாகுமரி, தூத் துக்குடி மாவட்டங்களுக்கு வட மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், இந்த ‘ரிங்’ ரோடு வழியாகத்தான் செல்கின்றன.

மதுரை விமான நிலையத்திற்கு செல்வதற்கு விவிஐபிகள் முதல் தொழில் அதிபர்கள், பொதுமக்கள் இந்த ‘ரிங்’ ரோட்டைத்தான் பயன்படுத்த வேண்டியது உள்ளது. அதனால், மதுரை ‘ரிங்’ ரோடு சாலை வழி போக்குவரத்திலும் முதல் வான் வழி போக்குவரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சாலையில் வழி நெடுக கற்கள் பெயர்ந்து மேடு, பள்ளமாக இருந்தன. பாதாள பள்ளங்களால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிர் பலிகள் அன்றாட நிகழ்வாகின. இதுகுறித்து ‘தி இந்து’வில் கடந்த 14-ம் தேதி வெளியான செய்தி எதிரொலியாக, மாநில நெடுஞ்சாலைத் துறையினர், தற்போது சேதமடைந்த மேடு, பள்ளமான ‘ரிங்’ ரோட்டில் கற்கள், தார் நிரப்பி, தற்காலிகமான தீர்வாக அவசர கதியில் பேட்ஜ் ஒர்க் செய் கின்றனர். கடந்த சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் இதுபோல், இந்த சாலை போக் குவரத்துக்கே லாயக்கற்ற நிலை யில் மிக மோசமாக காணப்பட்டது.

அப்போதும் ‘தி இந்து’வில் ‘ரிங்’ ரோட்டின் அவலம் என்று செய்தி வெளியிடப்பட்டது.

அந்நேரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இந்த ‘ரிங்’ரோட்டில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேச வந்தார். அதனால், அப்போதும் தற்காலிக தீர்வாக சேதமடைந்த ‘ரிங்’ ரோட்டில் மேடு, பள்ளங்களை சரி செய்து பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டன.

அதனால், அந்த பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்ட இடங்களில் மீண்டும் கற்கள், தார் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டன. தற்போதும் தற்காலிக தீர் வாக அவசர கதியில் பேட்ஜ் ஒர்க் செய்வதால் மீண்டும் சில மாதங்களில் பெயர்ந்து போக வாய்ப்புள்ளது. இந்த பேட்ஜ் ஒர்க்குக்காக தமிழக அரசு பல லட்சம் ரூபாய் நிதியையும், தொழிலாளர் உழைப்பையும் வீணடித்து வருகிறது.

தற்போது மதுரையில் சர்வதேச சரக்கு விமான நிலையம் அமைய இருப்பதால் ‘ரிங்’ ரோடு வழி யாக தென் மாவட்டங்களில் இருந்து சரக்குகள் அதிகளவு செல்ல வாய்ப்புள்ளதால் நிரந்தர தீர்வாக ‘ரிங்’ ரோட்டை சீரமைக்க ஜெயலலிதா அறிவித்த ரூ.200 கோடி திட்டத்தில் சாலையை விரிவுபடுத்தி நான்குவழிச் சா லையாக அமைக்க வேண் டும் என இந்த சாலையில் பயணிக்கும் தென் மாவட்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் தொழில்முனைவோர் எதிர் பார்க்கின்றனர்.

ரூ.200 கோடியில் நான்கு வழிச்சாலைதான்

இதுகுறித்து தொழில் முனைவோர்கள் கூறியது: தற்போது மதுரை விமான நிலையம், சர்வதேச சரக்கு விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் முதல் சரக்கு விமான போக்குவரத்து மதுரை விமானநிலையத்தில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு செயல்பட உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து தினமும் பல நூறு டன்னுக்கு மேல் கனரக பொருட்கள், மலர், காய்கறி, பழங்கள் மற்றும் பல்வகை பொருட்கள் இந்த ‘ரிங்’ ரோடு வழியாகதான் விமான நிலையத்துக்கு செல்லும். அதனால், தற்போதுள்ள ‘ரிங்’ ரோடு இந்த சரக்கு போக்குவரத்துக்கு பாதுகாப்பாகவும், தாங்குமளவுக்கு தரமாகவும் இருக்காது. அதனால் ஜெயலலிதா அறிவித்த 27 கி.மீ. தூரத்துக்கு ரூ.200 கோடி புதிய ‘ரிங்’ரோடு சாலை அமைப்பதே பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு தீர்வாக அமையும். சாலையை விரிவுபடுத்தி நான்கு வழிச்சாலையாக அமைத்தால் மட்டுமே விபத்துகள் ஏற்படாது. நான்கு வழிச் சாலையில்லாமல் தற்போதுள்ளதுபோல் புதிய ‘ரிங்’ ரோடு அமைத்தால் கடந்த காலத்தைப்போல் உடனடியாக சேதமடைந்து விபத்துகள் முன்பை விட அதிகமாக நடக்கவும் வாய்ப்புள்ளது என்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நான்கு வழிச்சாலையாகதான் புதிய சாலை அமைக்கப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x