Published : 12 Dec 2022 01:03 PM
Last Updated : 12 Dec 2022 01:03 PM
சென்னை: மேயர் பிரியா ஒரு துடிப்பில் இது போன்று நடந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு இன்று (டிச.12) ஆய்வு செய்தார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "திருவண்ணாமலை தீபத் திருவிழா எந்தவித அசம்பாவித சம்பவமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை பணிகளால் விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டவன் முன் அனைவரும் சமம். கோயில்களில் விஐபிக்களுக்கான அட்டை வழங்குவதை குறைத்துள்ளோம். பொதுமக்கள் அதிகமானோர் கான வேண்டும் என்று மகர தீபம் காண 15 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த விஐபி அட்டை குறைக்கப்பட்டு 9 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
மாண்டஸ் புயலால் சில கோயில்கள் சேதமடைந்துள்ளது. பார்த்த சாரதி கோயில் கோபுர கலசம் விழுந்துவிட்டது. அதனை உரிய சம்பிரதாயம் செய்த பிறகு கலசம் கோபுரத்தில் மீண்டும் வைக்கப்படும் பாரிமுனையில் உள்ள கோயிலில் கொடி மரம் சாய்ந்தது. அதனை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேயர் பிரியா ஒரு துடிப்பில் இது போன்று நடந்துள்ளார். ஆணுக்கு நிகர் பெண் என்ற பாரதியாரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மேயர் பிரியா முதலமைச்சர் கான்வாய் வாகனத்தில் சென்றார்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT