Published : 11 Dec 2022 07:18 AM
Last Updated : 11 Dec 2022 07:18 AM
சென்னை: தாம்பரம் மாநகராட்சி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் நகராட்சி, கடந்த2021-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சி ஆணையராக இளங்கோவன் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக கூடுதல் இயக்குநர் அந்தஸ்து பெற்ற ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கக் கோரி வழக்கறிஞர் ராஜமல்லன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது ஆணையராகஇருந்த இணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள இளங்கோவனே மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வருகிறார். இதுசட்டவிரோதமானது. ஆவடி மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரியை ஆணையராக நியமித்துள்ளது போல தாம்பரம் மாநகராட்சிக்கும் ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கவேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இதுதொடர்பாக தமிழக அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜன.4-க்கு தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT